அமர்நாத் குகையில் இருக்கும் சிவனின் பனி லிங்கம் - பக்தர்கள் குவிய காரணம் என்ன?

கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த அமர்நாத் குகை கோவில். இங்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், இயற்கையாக உருவான பனி லிங்கம் தான் சிறப்பே!
அமர்நாத் குகையில் இருக்கும் சிவனின் பனி லிங்கம் - பக்தர்கள் குவிய காரணம் என்ன?
அமர்நாத் குகையில் இருக்கும் சிவனின் பனி லிங்கம் - பக்தர்கள் குவிய காரணம் என்ன?Twitter
Published on

அமர்நாத் யாத்திரை பலருக்கும் பரீட்சயமான ஒன்று. ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். இங்கு இருக்கும் பனி லிங்கத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

நமது ஊர்களில் பல்வேறு புராண கதைகளுடன் பல சிவன் கோவில்கள் இருக்கும். அது பல வருடங்கள் பழமையானதாக இருக்கும். அந்த வரிசையில் அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணம் கூறுகிறது. சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது.

கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த அமர்நாத் குகை கோவில். இங்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், இயற்கையாக உருவான பனி லிங்கம் தான் சிறப்பே!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 61 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும்.

அமர்நாத் குகையில் இருக்கும் சிவனின் பனி லிங்கம் - பக்தர்கள் குவிய காரணம் என்ன?
இந்த சிவன் கோவிலின் மாதிரி வைத்துதான் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதா? சுவாரஸ்ய கதை!

இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நாம் காண பல விஷயங்கள் உள்ளன.

குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. இந்த குகையை அடைய சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்தார் என்று புராணம் கூறுகிறது.

பலரும் கால்நடையாக அல்லது குதிரைகளின் உதவியுடன் பனிலிங்கத்தை தரிசிக்க சென்று வருகின்றனர். ரம்யமாக இருக்கும் இந்த அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பலரும் விருப்பம் காட்டி வருகின்றனர்.

அமர்நாத் குகையில் இருக்கும் சிவனின் பனி லிங்கம் - பக்தர்கள் குவிய காரணம் என்ன?
தினமும் இரண்டு முறை மறையும் சிவன் கோவில் - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com