இந்தியா என்று எடுத்துக்கொண்டாலே ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கோவில்கள் என பல விஷயங்கள் இருக்கும். குறிப்பாக கோவில்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு கோவிலும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் கோவில் குறித்துதான் பார்க்க போகிறோம் இந்த பதிவில்.
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் உள்ள நீடகுண்டி அருகே ஒரு வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வருடத்தின் ஒரே ஒரு நாள் மட்டும் சுக்ஷேத்ரா, யாலகுரு கிராமத்தை சேர்ந்தவர்கள் வருகை தருகின்றனர்.
ஒரு கையில் குடை பிடித்தபடியும், பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வருகின்றனர்.
ஆனால் திருப்பதிக்கு பதிலாக இந்த கோவிலுக்கு செல்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. முன்னொரு காலத்தில் சுக்ஷேத்ரா, யாலகுரு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பதி செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
ஆனால் அங்கே இருந்து திருப்பதி செல்வது கடினமான பயணம் என்பதால் பக்தர்களின் கஷ்டத்தை அறிந்த வெங்கடேஸ்வரர், அதற்கு பதிலாக அடைக்கால் குண்டப்பா சந்நிதி அருகில் வெங்கடேஸ்வர கோவிலில் காட்சி அளித்ததாகவும் இந்த கோவிலுக்கு செல்வது திருப்பதி ஏழுமலையானை பார்த்ததற்கு சமம் என்று கூறியதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அந்த மலையில் தெரியும் ஒற்றைக்கல்லில் வெங்கடரமண லட்சுமி மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்று நம்புகின்றனர்.
அதனால் அதை நினைவு கூறுவதற்காக இங்கு ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் அடைக்கால் குண்டப்பா சந்நிதியின் கதவுகள் திறக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை, அக்டோபர் மாதத்தில், தீபாவளியன்று திறக்கப்படும். கோயிலின் தரிசன நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp