World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?

1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒரு வீரர் மட்டும், எந்த போட்டியிலும் விளையாடவே இல்லை.ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பை வென்ற இந்திய வீரர் என அறியப்படுகிறார்
World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?
World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?Twitter

1983ல் முதன் முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிபெற்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரு வீரர் மட்டும், எந்த போட்டியிலுமே விளையாடாமல் கோப்பையை வென்ற கதை தெரியுமா?

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டன. இம்முறை போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறுகிறது.

கடந்த ஞாயிற்று கிழமையன்று முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது

இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளது. இந்தியா இரு முறை கோப்பையை வென்றிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஒரு முறையும், 2011அம் ஆண்டு ஒரு முறையும்.

இந்த 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒரு வீரர் மட்டும், எந்த போட்டியிலும் விளையாடவே இல்லை.

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பை வென்ற இந்திய வீரர் என அறியப்படுகிறார் சுனில் வால்சன்

World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?
Dhoni: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தோனி; எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்- ஏன்? |Viral புகைப்படம்

இடது கை வேகப்பந்து வீச்சாளர் இந்த சுனில் வால்சன். ஆந்திர மாநிலம், செகந்தராபாத்தில், 1958ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் சுனில். இவரது பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள்.

சுனில் வால்சன் டெல்லி, தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் ஆகிய மூன்று வெவ்வேறு ரஞ்சி கோப்பை அணிகளில் விளையாடியுள்ளார்.

1982ஆம் ஆண்டு, துலீப் டிராப்யில் இவரது அபாரமான ஆட்டம், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவரை தேர்வு செய்ய வழிவகுத்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் கூட இவருக்கு விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

உலகக்கோப்பை 1983ல் இங்கிலாந்தில் நடைப்பெற்றது. அப்போது நடப்பு சாம்பியன்களாக இருந்த மேற்கு இந்திய தீவுகளுடன் ஓவலில் ஒரு போட்டி நடைபெறவிருந்தது.

அப்போது இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான ராஜர் பின்னி காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஃபிட்னஸ் சோதனையில், தேர்ச்சி பெற்றால் பின்னி விளையாடுவார், அல்லது வால்சன் அவருக்கு பதிலாக களமிறங்குவார் என அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்திய அணியில் 12th man ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் வால்சன்.

ஆனால் சோதனையில் பின்னி தேர்ச்சி பெற்றுவிட்டார். இதனால் சூனில் வால்சன் மீண்டும் அமரவைக்கப்பட்டார்.

World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?
MS Dhoni: ரூ.83 லட்சத்திற்கு ஏலம் போன தோனியின் 2011 உலகக்கோப்பை ஃபைனல் பேட்!

உலகக்கோப்பைக்கு பிறகு, சுனில் வால்சன் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடச் சென்றார்.

1987 இல் நடந்த அவர் விளையாடிய இறுதி ரஞ்சி சீசனில், ரயில்வே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியையும், இறுதிப்போட்டிக்கு கூடிச் சென்றார்

வால்சன் 1988 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சமயத்தில், 75 போட்டிகளில் 212 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் வால்சன்.

தற்போது வால்சன் டெல்லி கேபிடல்ஸின் உரிமையாளரான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸில் இணை துணைத் தலைவராக (Associate Vice President) பணியாற்றுகிறார்.

World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?
World Cup 2023: மீண்டும் சச்சினின் சாதனையை தகர்த்த கோலி - முதல் வெற்றியை பதித்த இந்தியா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com