தீபாவளி: இப்படியெல்லாம் கொண்டாடுகிறார்களா? - இந்திய மக்கள் பின்பற்றும் பல வழிமுறைகள் என்ன?

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒவ்வொரு மாதிரியாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளையும். இராமர் வனவாசம் முடித்து திரும்பிய நாளையும் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இன்னும் என்னென்ன தீபாவளிகள் இருக்கிறதென்று பார்க்கலாம்...
diwali
diwaliCanva
Published on

இந்தியாவில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்தியா முழுவதும் கொண்டாப்படும் இந்த பண்டிகை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக, ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.

தீப ஒளி திருநாள், நம் வாழ்வில் இருளை நீக்கி வெளிச்சத்தை கொடுக்கும் ஒரு பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசையின் போது தீப ஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

தென்னிந்திய மாநிலங்களில் கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தமிழகம்:

தமிழகத்தில் தீபாவளி, சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன், அடுப்பபை சுத்தம் செய்து, பாத்திரத்தில் சுண்ணாம்பு பூசப்படுகிறது. இந்த பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்படும். இந்த தண்ணீர் தான் தீபாவளி அன்று, எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து, வாசலில் கோலங்கள் இட்டு பட்டாசுகளை வெடிப்பது மற்றும் புதிய ஆடைகளை அணிவது ஆகியவை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.

தீபாவளி அன்று பயன்படுத்த பட்டாசுகள் மற்றும் புதிய ஆடைகள் ஒரு தட்டில் வைக்கப்படுகின்றன. தீபாவளி அல்லது நரக சதுர்த்தசி அன்று காலையில், சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

தலை தீபாவளி:

தென்னிந்தியாவில் தீபாவளி அன்று அனுசரிக்கப்படும் மற்றொரு தனித்துவமான சடங்கு தலை தீபாவளி ஆகும். இந்த நாளில், புதுமணத் தம்பதிகள் தங்கள் முதல் தீபாவளியை மணமகளின் பெற்றோர் வீட்டில் கொண்டாடுகின்றனர்

ஆந்திரா:

ஆந்திராவில் விஷ்ணு கடவுளின் கதையை கூறும், ஹரி கதா என்ற சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. தவிர, நரகாசுரனை வதம் செய்தது கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா என்பதால், அவருக்கு கழி மண்ணால் ஆன சிலைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கர்நாடகா:

கர்நாடகாவில் முதல் நாளான ஆஸ்வீஜ கிருஷ்ண சதுர்தசி அன்று மக்கள் எண்ணை தேய்த்து குளிக்கின்றனர். அதாவது, நரகாசுரனை கொன்ற பிறகு, கிருஷணர், தன் உடலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ எண்ணை தேய்த்து குளித்ததாக நம்பப்படுகிறது. அதனால் முதல் நாளில் எண்ணை குளியல். இரண்டாம் நாள் தீபாவளி. மூன்றாம் நாள் பலி பாட்யா என்று அழைக்கப்படுகிறது.

diwali
தீபாவளி ஸ்பெஷல் : பாரம்பரிய சுவையுடன் செட்டிநாடு பலகாரங்கள் - சிறப்பு என்ன?

வட மாநிலங்கள்:

வட மாநிலங்களில் ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக அனுசரிக்கப்படுகிறது. உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் பீஹார் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்கும்.

தசரா இரவில் இருந்தே தீபாவளி பண்டிகை இவர்களுக்கு தொடங்கி விடும். தசரா அன்று ராவண வதம் நிகழ்ச்சி நடைபெறும். ராவணனை கொன்று அயோத்தி திரும்பிய நாள் தீபாவளி என்பதால், அங்கு தசராவை ஒட்டி தீபாவளி பண்டிகை தொடங்குகிறது.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது

நாள் 1: தன்தேராஸ் -

யமதர்மனை வழிபடும் நாள். இந்த நாளில் உலோக பொருட்களை மக்கள் புதிதாக வாங்குவது வழக்கம்

நாள் 2: சோட்டி தீபாவளி -

இது ரூப் சதுர்தசி, நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது

நாள் 3: தீபாவளி -

இந்த நாளில் லக்ஷ்மி மற்றும் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்படும்

நாள் 4:

இந்த நாளில் கோவர்தன கிரி மலைக்கு பூஜை செய்யப்படும்

நாள் 5: பாய் தூஜ் -

இந்த நாளில் சகோதர சகோதரிகளுக்கானது. உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படும்.

முன்னோர்களுக்கான இரவு:

மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் இந்த லக்ஷ்மி பூஜை, துர்கா பூஜை முடிந்த 6 நாட்கள் கழித்து கொண்டாடப்படும். தீபாவளியை காளி பூஜையாக மக்கள் இம்மாநிலங்களில் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி இரவு முன்னோர்களின் இரவு என்று நம்பப்படுகிறது, மேலும் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் அவர்களின் ஆன்மாக்களை வழிநடத்த நீண்ட கம்பங்களில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நடைமுறை வங்காள கிராமப்புறத்தில் இன்றும் பின்பற்றப்படுகிறது.

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் தீபாவளி வணிகம் மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. தீபாவளி அன்று வீட்டு வாசலில் வண்ணமயமான கோலங்கள் போட்டு, வாசற்கதவுகளை திறந்து வைக்கின்றனர். இதன் மூலம் செல்வம் தரும் தெய்வமான லக்ஷ்மி அவர்களது வீட்டிற்கு வருவாள் என்பது நம்பிக்கை. மேலும் இந்த நாள் அன்று புதிய சொத்துக்கள் வாங்கினால் அது வருங்காலத்தில் பெருகும் என்பது இவர்களது நம்பிக்கை.

இப்படியாக இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது

diwali
தீபாவளி: ஆர்டர் செய்யாமல் அடுப்பில் செய்யுங்க - எளிமையான பலகார செய்முறைகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com