இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா : கரன்சிகள் தயாரிக்க எந்தெந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர்?

இந்தியாவில் ரிசர்வ் வங்கி தான் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறது. வங்கியின் மூன்று அச்சகங்களில் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்படுகிறது.
இந்திய ரூபாய் நோட்டு
இந்திய ரூபாய் நோட்டுcanva
Published on

பணம் இல்லாமல் நம் வாழ்க்கை நகராது. கையில் பணம் இருந்தால் நமக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்வோம். இந்த ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ தான் அச்சடிக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால், இந்த ரூபாய் நோட்டுகள் எந்தெந்த பொருட்களால் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?


ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 22ன் படி, இந்தியாவில் ரிசர்வ் வங்கி தான் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறது. வங்கியின் மூன்று அச்சகங்களில் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்படுகிறது. அதில் ஒன்று மட்டும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் புழக்கத்தில் விடப்படும். அதில் நிதி துறை செயலாளரின் கையொப்பம் இருக்கும். மற்ற நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இருக்கும். இவற்றை தான் நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

எதை கொண்டு ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுகிறது?

ரிசர்வ் வங்கியின் தகவலின்படி அனைத்து இந்திய ரூபாய் நோட்டுகளும் காட்டன் மற்றும் லினென் எனப்படும் பருத்தி நார் பொருள்களை அடக்கி தயார்செய்யப்படுகிறது. அதாவது 75% பருத்தி மற்றும் 25% லினென்

காட்டன் வைத்து தயாரிக்க என்ன காரணம்?

காகிதம் மிக மெலிதான பொருள். எளிதாக கிழிந்துவிடக் கூடியது. இந்த காரணத்திற்காகத் தான் ரூபாய் நோட்டுகளை பருத்தி கொண்டு தயார் செய்கிறது ரிசர்வ் வங்கி அச்சகம். மேலும் இந்த பருத்தி காகிதத்துடன் ஜெலட்டின் எனப்படும் பசையையும் அச்சடிக்கப் பயன்படுத்துகிறார்கள். இவ்விரண்டையும் பயன்படுத்துவதால், ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாது. மேலும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எழுத்துகள் நீண்ட நாட்கள் வரை அழியாமல் இருக்கும்.

இந்தியாவைத் தவிர ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அவர்களது நாட்டின் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க பருத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

ஐரோப்பா

ராயல் டச்சு கஸ்டர்ஸின் தகவல் படி, ஐரோப்பாவில் comber noil என்ற பொருளை கரன்சி தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது ஸ்பின்னிங்கின் கோம்பிங் செயல்முறையின்போது நிராகரிக்கப்படும் பருத்தி நார்களிலிருந்து பெறப்படுகிறது. இதன் சரியான அளவீட்டை அந்நாட்டு வங்கிகள் ரகசியமாக வைத்திருக்கின்றன என்றாலும், அவர்களும் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க பருத்தியை பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்கா

அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் பருத்திகொண்டே தயாராகிறது. பியூரோ ஆஃப் என்கிரேவிங் அண்ட் பிரின்ட்டிங் தகவலின் படி, அதன் அளவீடு 75% பருத்தி மற்றும் 25% லினென்

இவ்விரண்டு நாடுகளை தவிர ரஷ்யாவும் அதன் கரன்சி நோட்டுகளைத் தயாரிக்க பருத்தியை தான் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நாடும் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பருத்தியின் சதவிகிதம் மாறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரூபாய் நோட்டு
இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com