Dolo 650 : 350 கோடி மாத்திரைகள் விற்பனையா ? |எச்சரிக்கும் மருத்துவர்கள்

மாஸ்க், சானிடைசருக்கு அடுத்தபடியாக நாம் நாம் அதிகம் பயன்படுத்தியது டோலோ650 தான்.
Dolo 650

Dolo 650

Twitter

Published on

“மூன்று வேலை சாப்பாட்டுடன் சில மாத்திரைகளைப் போட்டுத் தான் டின்னரை” - என்பது வாட்ஸப் வந்த நாள் முதல் அன்கிள்கள் பகிர்ந்து வரும் குறுஞ்செய்தியாகும். குடும்பத்துக்கு இரண்டு அன்கிள்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மாத்திரை கன்டென்டுடன் வந்துவிடுவார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளில் உண்மையாகவே ஒரு மாத்திரை இவ்வளவு பெரிய பேச்சு பொருளாக இருக்கும் என நாம் யாரும் நினைத்திருக்கவில்லை.

ஆம் மாஸ்க், சானிடைசருக்கு அடுத்தபடியாக நாம் நாம் அதிகம் பயன்படுத்தியது டோலோ650 தான். மெடிக்கல் கடை அண்ணன்கள் நாம் சென்று கேட்பதற்கு முன்னரே கவர்கவராக பேக் செய்து வைத்து ரெடிமேடில் விற்றுக்கொண்டிருந்தனர். காரணம் வேறு யாராக இருக்க முடியும்? கொரோனா தான்.

Dolo 650

மைக்கேல் ஜாக்சன் : கலக கலைஞனின் அறியப்படாத வரலாறு | பகுதி - 1

Twitter

Twitter

Twitter

முதல் அலை தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 கோடி டோலோ மாத்திரைகள் விற்றுக்கொண்டு தான் இருந்தன. எல்லா காய்ச்சல் பிரச்சனைக்கும் இணை மாத்திரையாக மருத்துவர் எழுதிக்கொடுப்பார். அதைப் போட்டு தண்ணீர் குடித்தால் நோய் விட்டுப்போகத் தொடங்கியதாக நாமும் உணர்வோம். ஆனால் தொற்று பரவலுக்குப் பின்னர் அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால்… என்பது போல டோலோவின் மவுசும் ஏறிவிட்டது. 2020-ம் ஆண்டில் 141 கோடி டோலோ மாத்திரைகள் விற்றுத் தீர்ந்துள்ளது. 2021-ல் அதுவே 217 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் தெருக்கோடி மெடிக்கல்களில் கூட அவ்வப்போது டோலோ தட்டுப்பாடும் எட்டிப்பார்த்தது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலிக்கு நல்ல நிவாரணியாகக் கருதப்பட்ட டோலோ இப்போது, தூசி மூக்கில் நுழைந்து இரண்டு தும்மல் வந்தால் கூட தேடி ஓடும் நிலைக்குக் கொக்கி குமாரைப் போல வளர்த்துள்ளது. அத்தனைக்கும் காரணம் அச்சம். மருத்துவர்கள் தொடர்ச்சியாகத் தந்து வந்ததால் பிரபலமடைந்த டோலோ-வை மிட்டாய் வாங்கித் தின்பது போல வாயில் போட்டு தண்ணீர் குடித்துக் கொள்கின்றனர்.இதனால் 2021-ல் மட்டுமே dolo மாத்திரை 307 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது.

ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுவது பெரிய அளவிலான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் போதை மாத்திரை போல அசதிக்கெல்லாம் டோலோ பயன்படுத்தும் மகா புத்திசாலிகளே உங்கள் உடல் நலனில் நீங்களே தீவைத்துக்கொள்கின்றீர்கள் என்று தான் சொல்ல முடியும்.

Burj Khalifa

Burj Khalifa

Facebook

கடந்த ஆண்டுகளில் நாம் பயன்படுத்திய டோலோ மாத்திரைகளை அடுக்கி வைத்தால் அது உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை விட 63000 மடங்கு பெரிதாக இருக்குமாம். நாம் எல்லாரும் பங்கு போட்டு எத்தனை புர்ஜ் கலிஃபாவை விழுங்கியிருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திருந்த முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில், டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் போன்ற நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் டோலோ -650ஐ எடுத்துக்கொள்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

கொரோனாவிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முக கவசம் அணியுங்கள், சானிடைசர் பயன்படுத்துங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் வீட்டில் அரை டஜன் டோலோ வாங்கி வைத்துக்கொண்டு போரடிக்கும் போதெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் அது உங்களைப் போட்டுத் தள்ளிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். அட உன்மையாகத் தான், “கல்லீரல், சிறுநீரகம் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிட வாய்ப்பிருக்கிறது” வைரஸிடம் இருந்து விலகியிருப்பது போல டோலோ விடமிருந்தும் சுய மருத்துவ சிகாமணிகளிடம் இருந்தும் விலகியிருங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கு நல்லது!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com