டாமினோஸ் பீட்ஸா இப்படி தான் தயாரிக்கப்படுகிறதா? - வைரல் புகைப்படத்துக்கு நிறுவனம் விளக்கம்

உணவகங்களின் தரத்திற்கும், அவர்கள் பின்பற்றும் சுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் அமைந்துள்ளது, டிவிட்டர் பயனர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று.
Pizza Dough
Pizza DoughTwitter
Published on

தரையை துடைக்கும் மாப்களுக்கு மத்தியில் பீட்ஸா மாவு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பெரும்பாலும் நாம் உயர்தர உணவகங்களில் சாப்பிடும்போது, அவர்கள் சுகாதார விஷயத்தில் கவனமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் நம்பி சாப்பிடுவோம். ஆனால், அப்படி உணவகங்களின் தரத்திற்கும், அவர்கள் பின்பற்றும் சுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் அமைந்துள்ளது, டிவிட்டர் பயனர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று.

பிரபல பீட்ஸா உணவகமான டாமினோஸின் சமையலறை புகைப்படம் ஒன்றை சாஹில் கர்னானி என்ற இளைஞர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் டிரேக்களில் பீட்ஸா செய்ய பயன்படுத்தப்படும் உருண்டைகள், தரையைத் துடைக்கும் மாப்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்தது.

அதிலும், ஒரு டிரே அந்த மாப்களை உரசிக்கொண்டு இருக்கும் விதத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பீட்ஸா டோக்களை (மாவு) தான் வாடிக்கையாளர்கள் கேட்கும் போது பீட்ஸாவாக தயாரித்து கொடுக்கிறது உணவகம்.

Pizza Dough
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

பகிரப்பட்ட புகைப்படம், டாமினோஸின் பெங்களூரு நகரத்தில் இருக்கும் கிளையாகும். இந்த புகைப்படத்தை சாஹில், "இப்படித் தான் டாமினோஸ் இந்தியா நமக்கு சுவையான, தரமான பீட்ஸாக்களை தயார் செய்து தருகிறது...மிகவும் அருவருக்கத்தக்கது" என தலைப்பிட்டு, உணவு பாதுகாப்புத் துறையையும் டேக் செய்திருந்தார்.


இந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் சர்ச்சையாக, பதிலளித்த டாமினோஸ் நிர்வாகம், இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

"எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது.

Pizza Dough
ஹார்ட் வடிவ சாண்ட்விச்: இணையத்தை ஷாக்காக வைத்த விசித்திர உணவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com