காஷ்மீரில் பிரபலமடைந்து வரும் ’துக்கர்தானி சந்தை’ - பின்னணி என்ன?

இதில் தோக்ரா தால், கீர் (பாயாசம்), மக்கி கி ரோட்டி, லஸ்ஸி ஆகியவை அடங்கும். மக்கி கி ரோட்டி என்பது சோளத்தை பயன்படுத்தி ஜம்மு பகுதியில் பரவலாக செய்யப்படும் சப்பாத்தி வகையாகும்.
காஷ்மீரில் பிரபலமடைந்து வரும் ’துக்கர்தானி சந்தை’ - பின்னணி என்ன?
காஷ்மீரில் பிரபலமடைந்து வரும் ’துக்கர்தானி சந்தை’ - பின்னணி என்ன? ட்விட்டர்
Published on

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமங்கள் புதுமைக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. தனித்துவமான அடையாளங்களை பெற்று வருகிறது.

அப்படி தனது பாரம்பரிய உணவு வகைகளுக்காக பிரபலமடைந்து வருகிறது மற்றுமொரு இந்திய கிராமம்

காஷ்மீரின் ரியாசியில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழு மூலம் ரியாசி மாவட்ட நிர்வாகம் ஒரு முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறை, கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் ரியாசியால் கடந்த மே மாதம் நாரி கி பெஹசான் என்ற இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இங்கு துக்கர்தானி என்ற பெயரில் சந்தை (ஹாட்) ஒன்று நடத்தப்படுகிறது. இதில் சுமார் 1500 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த கிராமத்தின் பாரம்பரிய உணவுகளான தோக்ரா வகை உணவுகளை சமைக்கின்றனர்.

இதில் தோக்ரா தால், கீர் (பாயாசம்), மக்கி கி ரோட்டி, லஸ்ஸி ஆகியவை அடங்கும். மக்கி கி ரோட்டி என்பது சோளத்தை பயன்படுத்தி ஜம்மு பகுதியில் பரவலாக செய்யப்படும் சப்பாத்தி வகையாகும்.

பெண்களின் சமையல் திறன் மேம்பாடு மற்றும் அக்கிராமத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது ரியாசி நிர்வாகம்.

காஷ்மீரில் பிரபலமடைந்து வரும் ’துக்கர்தானி சந்தை’ - பின்னணி என்ன?
ஜம்மு காஷ்மீர்: கோடைகாலத்தில் மிரட்டும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் சொல்வதென்ன?

அதாவது தங்களது வீடுகளிலிருந்தே பெண்கள் சம்பாதிக்க, தங்கள் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

பப்படம், சட்னிகள், மசாலாக்கள் போன்ற உணவு வகைகள், அவற்றை தவிர கைவினை பொருட்கள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை பொருட்கள் ஆகியவையும் இங்கு விற்கப்படுகின்றன.

இவர்கள் தயாரிக்கும் இந்த ரொட்டி, கீர் போன்ற உணவுகள் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது செய்து தரப்படுவதால், உணவு வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும், இது பாரம்பரிய சுவையைக் கொண்டுள்ளதாலும், கமர்சியல் உணவகங்களை விட விலைக் குறைவாக இருப்பதாலும் மக்கள் தோக்ரா உணவுகளை நாடி வருவது அதிகரித்துள்ளது

பெண்கள் தனியாகவும், குழுவாகவும் தொழில் செய்ய அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கவும் முயற்சிகள் செய்யப்படுவதாக நகர நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்

ரியாசி

சேனாப் நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த ரியாசி நகரம். பீம்கர் வம்சத்தின் ராஜா பீம் தேவ் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது இந்த ரியாசி நகரம்.

சுற்றுலா தலங்கள்

இங்கு அமைந்திருக்கும் வைஷ்னோ தேவி கோவில், நவதேவி கோவில், சியாத் பாபா நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று.

காஷ்மீரில் பிரபலமடைந்து வரும் ’துக்கர்தானி சந்தை’ - பின்னணி என்ன?
இந்தியாவில் மற்றொரு காஷ்மீர்: மைனஸ் டிகிரியில் மயக்கும் லம்பாசிங்கி கிராமம்! ஏன் ஸ்பெஷல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com