பீகார் : கல்லூரி வாசலில் டீ விற்கும் பட்டதாரி இளம்பெண் பிரியங்கா

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற 24 வயதான இளம்பெண், கல்லூரி வாசலில் தேநீர் விற்று வரும் சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
Priyanka Gupta
Priyanka GuptaTwitter
Published on

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்ற இளம்பெண், பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் இருந்துள்ளது, இதனையடுத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் எழுதினார். ஆனால் அதிலும் வெற்றிபெறாத காரணத்தால், சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் பிரியங்கா குப்தா எண்ணியுள்ளார்.

பாட்னாவில் மகளிர் கல்லூரிக்கு அருகே தேநீர்க் கடை ஒன்றை நண்பர்களின் உதவியுடன் பிரியங்கா குப்தா தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தன்னைச் சார்ந்து இருக்க வேண்டும் என்றே விரும்பினேன், எனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தேன். தேநீர் விற்க உறவினர்கள் உள்ளிட்டோர் பல எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், மன உறுதியோடு தேநீர்க் கடை அமைத்ததாக பிரியங்கா குப்தா கூறினார்.

மேலும் அந்த கடையில் மசாலா டீ, சாக்லேட் டீ போன்ற பல்வேறு வகையான தேநீர் விற்கப்படுவதாகவும், கல்லூரி மாணவிகள் தேநீர்க் கடைக்கு அதிகளவில் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Priyanka Gupta
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com