மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ANI இன் படி, பால்கரின் வசாய் என்ற இடத்தில் மின்-ஸ்கூட்டர் வெடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளான்
ஷபீர் அன்சாரி என்ற 7 வயது சிறுவன் மற்றும் அவரது பாட்டி ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அன்சாரியின் தந்தை மின்சார வாகனத்தின் பேட்டரியை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது தான் பேட்டரி திடீரென வெடித்தது.
பாட்டிக்கு சிறு காயம் ஏற்பட்டது, சிறுவன் அன்சாரி 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.
பேட்டரி அதிகப்படியாக வெப்பமானதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அன்சாரியின் குடும்பத்தினர் ஸ்கூட்டர் உற்பத்தியாளரை பழைய பேட்டரியை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர் மாணிக்பூர் காவல்துறையினர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திரப் பிரதேசத்தில் மின்சார இரு சக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். விஜயவாடாவில் படுக்கையறையில் சார்ஜ் போட்டிருந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இது போன்ற இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி தீ விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust