இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே இரு தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அவரது வீடுகளில் ஒன்று தீவைக்கப்பட்டது. பல அரசியல்வாதிகளின் வீடுகளை மக்கள் தீக்கிரையாக்கியிருக்கின்றனர். மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பாஜக ஆட்சியும் ராஜபக்சேவின் வழியைத்தான் பின்பற்றுவதாகக் கூறி விமர்சித்திருக்கிறார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி.
இது குறித்து மெஹ்பூபா முஃப்தி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “தற்போது இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். இலங்கை எந்த வழியில் சென்றதோ அதே வழியில் தான் இந்தியாவும் செல்கிறது.
2014 முதல் இந்தியாவில் இனவெறி மற்றும் கற்பனையாக உருவாக்கப்பட்டவற்றின் மீதான அச்சம் அதிகரித்திருக்கின்றன. மத பெரும்பான்மைவாதம் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதம் தற்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. இது சமுக ஒற்றுமையின்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பைச் சிதைத்து வருகிறது”.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp