மஹுவா: பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட இந்திய பாரம்பரிய பானம் - ஒரு வரலாற்றுப் பார்வை!

சுமார் 3000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த ஆதிவாசிகள், மஹுவாவை “வாழ்க்கையின் மரம்” என்று கருதுகிறார்கள். மஹுவாவிலிருந்து வெஜிடபிள் பட்டர், மருந்துகள், சிரப்கள் மற்றும் அல்கஹால் தயாரிக்கப்படுகிறது
மஹுவா
மஹுவாcanva

திராட்சை முதல் தானியங்கள் வரை அனைத்திலிருந்தும் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் அடிப்படை பொருளைப் பொருத்து மதுபானத்தின் குணமும் சுவையும் அமையும். இவற்றைப் பொருத்து தான் விலையும் இருக்கும்.

அல்கஹால் உடல்நலத்திற்கு கேடு தான் என்றாலும் சமூகத்தில் அந்தஸ்துள்ள உணவாகவே திகழ்கிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் நாம் யாருக்கும் தெரியாத சில பானங்கள் எப்போதுமே இருந்து வருகின்றன.

அதிகம் புழக்கத்தில் இல்லாத, தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

இந்தியாவில் பல ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகத்தினரால் தயாரிக்கப்படும், அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு குறிப்பிட்ட வகை பானமான மஹுவா, இந்தியாவிலும், இந்தியாவை நூற்றாண்டுகளாக ஆண்ட பிரிட்டிஷ் அரசாலும் தடை செய்யப்பட்டது குறித்து தெரியுமா?

மஹுவா - பாரம்பரியத்தின் சின்னம்

மதுகா லான்கிஃபோலா அல்லது மஹுவா அல்லது இந்தியன் பட்டர் ட்ரீ, என்று அறியப்படுகிறது மஹுவா மரம். இந்த மரத்திலிருந்து தான் பழங்குடியினரால் தயாரிக்கப்படுகிறது மஹுவா மதுபானம்.

இந்தியாவின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளிலில், சந்தல், கோண்ட், முண்டாஸ் மற்றும் ஒராவன் பழங்குடி மக்களால் மஹுவா பயிரிடப்படுகிறது.

இது, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஒடிசா மகாராஷ்டிரா பீகார், தமிழ்நாடு ஆகியப் பகுதிகளில் மிகுதியாக காணப்படும். இதன் இலைகள் அரிதாகவே உதிரும். பெரும்பாலும் பசுமையாகவே இருக்கும் மஹுவா மரம்.

கலாச்சார சின்னமாக போற்றப்படும் மஹுவா, பழங்குடிகளின் உணவின் ஆதாரமாகவும், மருத்துவ குணங்களும் நிறைந்ததாகவும் இருக்கிறது.

இந்தியாவின் டெக்கிலா:

சுமார் 3000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த ஆதிவாசிகள், மஹுவாவை “வாழ்க்கையின் மரம்” என்று கருதுகிறார்கள். மஹுவாவிலிருந்து வெஜிடபிள் பட்டர், மருந்துகள், சிரப்கள் மற்றும் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது

பழங்குடியினர் இதன் பூக்கள் மற்றும் பழங்களை சேகரித்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்தியாவின் மிக பழமையான மதுபானமாக தான் மஹுவா அறியப்படுகிறது. இதன் அரிதான சுவையின் காரணமாக இந்தியாவின் டெக்கிலா என்றும் அழைக்கின்றனர்.

மஹுவா பானம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

மஹுவா மலரின் இதழ்கள் வெல்லம் மற்றும் தண்ணீருடன் சேர்க்கப்படுகின்றன. இவற்றுடன் மஹுவாவின் பழம் அதிலிருக்கும் சர்க்கரை மற்றும் ஆல்கஹால் தன்மையை அதிகரிக்க சேர்க்கப்டுகிறது.

அவை 8 நாட்களுக்கு புளிக்கவைக்கப்படுகின்றன. இந்த கலவையானது பின்னர் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு உலோக பானைக்கு மாற்றப்படுகிறது. திறந்த அடிப்பகுதியுடன் ஒரு சிறிய களிமண் பானை உலோகத்தின் மீது இருக்கும்.

மண் பானையில் ஒரு துளைக்குள் ஒரு குழாய் பொருத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்ட மற்றொரு உலோக பானை அதன் மேல் வைக்கப்படும். இதனிலிருந்து வெளியேறும் நீராவியைப் பிடிக்க, 3 பானைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளில் சேறு மற்றும் துணிகளால் மூடப்படுகின்றது.

வேகவைத்த மஹுவா கலவை நீராவியை உருவாக்குகிறது. இது களிமண் பானையில் சேகரிக்கிறது. இது குழாய் வழியாக சொட்டுகளாக சேகரிக்கப்படுகிறது. 8 லிட்டர் மதுபானத்தை காய்ச்ச 3 முதல் 4 மணிநேரம் தொடர்ந்து இதை சூடாக்கவேண்டும்.

மஹுவா மதுபானம் ஒவ்வொரு முறை தயாரிக்கப்படும்போதும் ஒவ்வொரு விதமான சுவையை கொண்டிருக்கும்.

பிரிட்டிஷ் அரசு விதித்த தடை, புதிய சட்டங்கள்

மஹுவா பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனை ஆபத்தான பானம் எனக் கூறி பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் மஹுவா வைன் உற்பத்திக்கு தடை விதித்தது.

இதற்காக சில புதிய சட்டங்களை ஆங்கிலேயர்கள் அமல்படுத்தினார்கள். Bombay Excise Act of 1878 and the Mahura Act of 1892 ஆகிய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் மஹுவா பானம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டதோடு, அவற்றின் பூக்களை சேகரிக்கவும் தடை போடப்பட்டது.

இதனால் சட்டவிரோதமாக மஹுவா பானம் தயாரிக்கப்பட்டு, பானத்தின் தரம் குறைந்தது என பிபிசி தளத்தின் அறிக்கை கூறுகிறது.

மஹுவாவில் ஆபத்தான குணங்கள் இருப்பதாக கூறினாலும், உண்மையில், லண்டன் மற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன்களுக்காக தான் இந்த தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு மதுபானங்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டி, ராணுவ செலவுகளுக்கு அந்த பணத்தை பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திக்கொண்டது.

சுதந்திரத்திற்கு பிறகும், மற்ற ஆல்கஹால் வகைகள் அதிக புழக்கத்திற்கு வந்தாலும், மஹுவாவின் மீதான கடுமையான சட்டங்கள் மாறாமல் இருந்தன. தரம் குறைந்த, ‘ஆபத்தான' பானமாக வரையறுக்கப்பட்டது மஹுவா.

மேலும், கிராமப்புற சந்தைகளுக்கு அப்பாற்பட்டு பழங்குடி மக்களுக்கு அதை உற்பத்தி செய்து விற்கும் உரிமை மறுக்கப்பட்டது. மஹுவாவை நாட்டு சரக்கு என்று வரையறுத்து, கீழ் தட்டு பானமாக பிரச்சாரம் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் மஹுவா மீதான கடும் சட்டங்கள் இந்தியாவில் தளர்க்கப்பட்டு வருகின்றன.

2021 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச அரசு மஹுவாவை பாரம்பரிய மதுபானமாக அறிவித்தது. மேலும் மகாராஷ்டிர மாநில அரசு அதன் பழமையான சட்டங்களை மாற்றியமைத்து, உள்ளூர் பழங்குடியின மக்கள் பூக்களை சேகரிப்பதையும், சேமித்து வைப்பதையும் சட்டப்பூர்வமாக்கியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com