ஐந்து மாநில தேர்தல் : எங்கு யார் வெற்றி பெறுவார் ? - விரைவான மற்றும் விரிவான முன்னோட்டம்

இந்திய அரசியலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என அனைத்து தேசிய கட்சிகளுக்கும் இந்த ஐந்து மாநில தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாட்டின் அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கப் போகும் இந்த தேர்தல்களின் ஒரு விரைவான மற்றும் விரிவான முன்னோட்டத்தை இங்கு காணலாம்
பாஜக vs காங்கிரஸ்

பாஜக vs காங்கிரஸ்

Twitter

Published on

உத்திர பிரதேசம்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. இதனால் பாஜக பெரும் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. இதனைப் பயன்படுத்தி அகிலேஷ் யாதவ் வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்லலாம் எனக் கணக்கு போடுகிறார். அதற்கு ஏதுவாக தேர்தல் அறிவித்த சில தினங்களில் மூன்று பாஜக அமைச்சர்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வந்து சேர்ந்தனர். இதனால் அகிலேஷின் கை ஓங்கியது. ஆனால் அதன் பின்னர் சாமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் 2017 தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணாவின் வருகையால் பாஜக கூடாரம் நிம்மதியடைந்தது.

ஆனால் பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக அமையும் வகையில் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகத் தேசிய கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஒழித்துவிட வேண்டும் என்ற கருத்துடன் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் வாரணாசியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் மம்தா பாணர்ஜி.

யோகி மற்றும் மோடி

யோகி மற்றும் மோடி

Twitter

பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய நான்கு கட்சிகளுக்கு இடையிலும் தேர்தல் போட்டி நிலவினாலும் வெற்றி வாய்ப்பு பாஜக அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாடி கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது.

403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தின் பல இடங்களுக்குப் பிரியங்கா காந்தி நேரில் சென்று வேலை செய்து வந்தாலும் காங்கிரஸ் தேர்தலை வெல்லும் அளவு அங்கு வலுவாக இல்லை. 40% பெண்களுக்கு சீட், இளைஞர்களுக்குத் தனியான தேர்தல் வாக்குறுதி பட்டியல் என காங்கிரஸின் தேர்தல் நகர்வுகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும் வாக்குகளாக மாறும் சாத்தியக்கூறு இல்லை. பகுஜன் சமாஜ் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை அடைந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிலையான மக்கள் செல்வாக்குடைய கட்சியாகப் போட்டியிடும் வாய்ப்பை பெறலாம்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

Twitter

மணிப்பூர்

மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நாகாலாந்து மக்கள் மீதான வன்முறை மற்றும் மக்களின் போராட்டங்கள் மணிப்பூர் தேர்தலிலும் எதிரொலித்தால் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்குப் பலத்த பின்னடைவாக இருக்கும். கடந்த 2002 முதல் 2017 வரை மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. 2017 தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்கத் தவறியது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சியமைத்தது. ஆனால் இம்முறை தேர்தலுக்கு முன்பான கூட்டணி அமையாததால் பாஜக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெரும் முயற்சியில் உள்ளது.

எல்லா மாநிலங்களையும் போலக் காங்கிரஸ் தன் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆளும் பாஜக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதனால் இந்த முறை நிச்சயம் வெற்றி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது காங்கிரஸ் கூடாரம்.

மணிப்பூர் பா.ஜ.க முதல்வர் என்.பிரேன் சிங்

மணிப்பூர் பா.ஜ.க முதல்வர் என்.பிரேன் சிங்

Twitter

மணிப்பூர் மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக், அசாம் மாநில அமைச்சர் அசோக் சிங்கால் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மறைமுகமாக இதனைச் சுட்டிக் காட்டி இருந்தனர். இந்த முறை தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், எனினும் தங்களது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைப்பது சம்பந்தமாகவும் யோசித்து வருவதாகப் பேட்டி அளித்திருந்தனர்.

ஆனால், கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய மக்கள் கட்சி மற்றும் நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் ஏற்கெனவே 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

சித்து மற்றும்  அமரீந்தர் சிங்

சித்து மற்றும்  அமரீந்தர் சிங்

Twitter

பஞ்சாப்

விவசாய சட்ட போராட்டங்களும் அதன் பின் நடந்த பிரச்சனைகளுமே பாஜக-வுக்கு பஞ்சாபில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை நமக்குக் காட்டிவிட்டன. அங்கு கடும் போட்டி நடப்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையில் தான். முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார். இது காங்கிரஸுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மாநிலக் கட்சியான பிரகாஷ் சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது.

பஞ்சாபிலுள்ள 32 விவசாயச் சங்கங்களில், 22 விவசாயச் சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த சம்யுக்தா சமாஜ் மோர்ச்சா கட்சி, 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. பஞ்சாபின் மிகப்பெரிய வேளாண் சங்கமான பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), விவசாயிகளின் கட்சிக்கு ஆதரவும் தரவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, சம்யுக்தா சமாஜ் மோர்ச்சாவும் பஞ்சாப் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றுதான் கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

Twitter

ஆளும் காங்கிரஸ் கட்சிமீது பஞ்சாப் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 18 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து எளிய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி. தொலைப்பேசி எண் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் மக்களிடம் கருத்து கேட்டு முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களில் அதிகம் பேர், பக்வந்த் மான் பெயரைச் சொன்னதால் அவரை முதல்வர் வேட்பாளராக ஆக்கியிருக்கிறது ஆம் ஆத்மி. ஜாட்-சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்த பக்வந்த் மான், நகைச்சுவைக் கலைஞர் என்பதால் பஞ்சாப் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புது விதமான தேர்தல் யுக்திகள் ஆம் ஆத்மியை மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளன.

அமரீந்தர் சிங் விலகியதனால் முதல்வராக்கப்பட்டவர் சரண்ஜித் சன்னி. பஞ்சாப்-ன் முதல் தலித் முதலமைச்சராவார். காங்கிரஸ் இவரைய முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் முதல் நிலவிய எல்லா சவால்களையுமே திறம்படக் கையாண்டுள்ளார் சன்னி. அத்துடன் பஞ்சாபில் 30% வாக்குகள் தலித் மக்களுடையது என்பதால் வெற்றி வாய்ப்பு சன்னிக்கு அதிகம். ஆனால் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற காங்கிரஸின் திட்டம் அதிகார மட்டத்திலிருக்கும் ஜாட் சமூகத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் ஆம் ஆத்மி ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பக்வந்த் மான்-ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த “நவ்ஜோத் சித்து”-வை காங்கிரஸ் தனது வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் அது தலித் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. இந்த குழப்பமான சூழலும் காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் களத்தில் ஆம் ஆத்மியின் கையை ஓங்கச் செய்திருக்கிறது.

உத்தரகாண்ட் தேர்தல் களம்

உத்தரகாண்ட் தேர்தல் களம்

Twitter

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட 70 தொகுதிகள் மட்டுமே உடைய சிறிய மாநிலமே. பிப்ரவரி 14ம் தேதி இதற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம், கொரோனாவைச் சரியாகக் கையாளாதது உள்ளிட்ட காரணங்களால், ஆளும் பா.ஜ.க அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. இதனால் இரண்டு முதல்வர்களை மாற்றி, மூன்றாவது நபராக புஷ்கர் சிங் தாமி முதல்வராக இருக்கிறார். ஆனால் காங்கிரஸில் இருக்கும் உட்கட்சி பூசல்கள் தேர்தல் களத்தை பாஜகவுக்கு சாதகமாக மாற்றிவிட்டன.

பாஜக vs காங்கிரஸ்

மோடியும் டெலிப்ராம்ப்டர்களும்…

சில நாட்களுக்கு முன் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின், சகோதரரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார் இது போன்ற நிகழ்வுகள் பாஜகவுக்கு வலுசேர்பதாக உள்ளன. எனினும் களத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி

ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி

Twitter

கோவா

கடந்த தேர்தலில் தனித்து அதிக தொகுதிகளை வென்றது காங்கிரஸ். காங்கிரஸிடமிருந்த 17 எம்.எல்.ஏ-க்களில், 13 பேர் பா.ஜ.க-வுக்கு தாவிவிட்டனர். அதே போலத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, , மூன்று எம்.எல்.ஏ-க்களையும், ஒரு அமைச்சரையும் இழந்திருக்கிறது பா.ஜ.க.

கோவாவில் கிறிஸ்தவர்களின் வாக்கு 25% வரை இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பாஜக இங்கு ஆதிக்கம் செலுத்துவது மிகக் கடினமான ஒன்றே. கோவாவில் வேகமாக வளர்ந்துவரும் ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. கோவா தேர்தலில், மாநிலக் கட்சியான மகாராஷ்டிர வாடி கோமந்தகா கட்சியுடன் மம்தா பானர்ஜி கூட்டணி அமைத்திருக்கிறார். ஆனாலும் பாஜக - ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் தான் கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com