FIFA உலக கோப்பை 2022: கால்பந்துதொடரை ஒன்றாக காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்!

அந்த வீட்டை அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய ஜாம்பவான்களின் உருவப்படங்களுடன் அலங்கரித்துள்ளனர்.
கால்பந்து போட்டியை காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்
கால்பந்து போட்டியை காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்Twitter
Published on

FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகளை ஒன்றாக இணைந்து பார்க்க கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 17 பேர் சேர்ந்து ரூ.23 லட்சத்திற்கு தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.

கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தார் நாட்டில் இன்று தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்கின்றன. நவம்பர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் 18ம் தேதிவரை நடைபெறும் இந்த போட்டிகளுக்கான தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த போட்டியை கண்டு களிக்க கால்பந்து ரசிகர்கள் ஒரு புதிய வீட்டை விற்பனைக்கு வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் முண்டக்காமுகல் என்ற சிறிய கிராமத்தில் உள்ள கால்பந்து ரசிகர்கள், FIFA உலகக் கோப்பையை கொண்டாடுவதற்காகவே 23 லட்சம் ரூபாய் செலவில் வீடு வாங்கியுள்ளனர்.

தீவிர கால்பந்து ரசிகர்கள் 17 பேர் இந்த வீட்டை வாங்குவதற்கான செலவை பகிர்ந்துள்ளனர்.

வீட்டின் சுவரில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய ஜாம்பவான்களின் உருவப்படங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர்.

கால்பந்து போட்டியை காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்
உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?

மேலும் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் வண்ணங்களில் தங்கள் புது வீட்டிற்கு பெயின்ட் அடித்துள்ளனர். இது தவிர, பல வீரர்கள் மற்றும் அணிகளின் கட்அவுட்டுகளை அவர்கள் அந்த வீட்டில் வைத்துள்ளனர்.

இது குறித்து வீடு வாங்கியவர்களில் ஒருவர் கூறுகையில், "FIFA உலகக் கோப்பை 2022 க்கு சிறப்பு ஏதாவது செய்ய நாங்கள் திட்டமிட்டோம், ஏற்கனவே விற்பனைக்கு வந்த இந்த வீட்டை நாங்கள் 17 பேர் 23 லட்ச ரூபாய்க்கு வாங்கி FIFA அணிகளின் கொடிகளால் அலங்கரித்தோம். இங்கே கூடி பெரிய திரை இருக்கும் டிவியில் போட்டியைப் பார்க்கிறோம்." என்றார்.

கடந்த 15-20 ஆண்டுகளாக, கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை ஒன்றாகக் காண இந்த குழு ஒன்று கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து போட்டியை காண ரூ.23 லட்சத்திற்கு வீடு வாங்கிய ரசிகர்கள்
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com