"நாம சாகபோறோம்!" 230 கிமீ வேகத்தில் பறந்த கார் - ஃபேஸ்புக் லைவில் கதறிய நண்பர்கள்| video

மருத்துவக் கல்லூரி பேராசிரியரான ஆனந்த் பிரகாஷ் என்பவர் காரை ஓட்டியுள்ளார். இவருடன் இவரது நண்பர்கள் பயணித்துள்ளனர்.
car crash (rep)
car crash (rep)canva
Published on

உத்திரப் பிரதேசத்தில் அதிவேகமாக காரை ஓட்டி சென்று லாரி மீது மோதிய விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட லைவ் வீடியோ இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உத்திரபிரதேசம் லக்னோ - காசிபூர் மாவட்டங்களை இணைக்கும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 15 ஆம் தேதி பிஎம்டபுள்யூ கார் ஒன்று லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேருமே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் அவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட லைவ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரி பேராசிரியரான ஆனந்த் பிரகாஷ் என்பவர் காரை ஓட்டியுள்ளார். இவருடன் இவரது நண்பர்கள் மூன்று பேர் பயணித்துள்ளனர். இவர்கள் சுல்தான்பூரிலிருந்து டெல்லி பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது பயணிகளில் ஒருவர் ஃபேஸ்புக்கில் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் 100 கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் காரின் வேகத்தை மெல்ல அதிகரிக்கிறார் ஓட்டுநர். அது 120, 140 என ஏறிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் 220 கிமீ வேகத்தை தொட்டது. அப்போது அவரிடம், 300 கிமீ வேகத்தில் செல்லுமாறு ஒருவர் கூறுவது பதிவாகியுள்ளது.

மற்றொருவரோ, வேகத்தை குறைக்குமாறும், நாம் சாகப்போகிறோம் என்றும் கூறுகிறார். ஆனால் அவரை பொருட்படுத்தாமல் காரை அதி வேகமாக ஓட்டி செல்கிறார் ஓட்டுநர்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த ஃபேஸ்புக் நேரலை நிறுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்திலேயே அந்த காரும், எதிரே வந்த லாரியின் மீது மோதியது. அந்த விபத்தில் பயணிகள் நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். லாரியின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

அவரை போலீசார் தேடிவரும் நிலையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

car crash (rep)
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com