ஆற்றில் ஓடக்கூடிய சொகுசு கப்பல்களில் உலகிலேயே மிக நீளமான கப்பல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அதன் சேவை தொடங்கும் என்றும் அது 4000 கிலோமீட்டர் பாதையில் செல்லும் என்றும் மத்திய நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறியிருக்கிறார்.
கங்கா விலாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பயணத்தைத் தொடங்கி அசாம் மாநிலத்தின் திப்ருகரில் முடியும். கொல்கத்தா தாகா நகரங்கள் வழியாக இதன் பயணங்கள் இருக்கும்.
இந்த கப்பலில் பயணிப்பவர்கள் இந்தியாவின் இயற்கையழகை ரசித்தவாறு செல்வதற்கு ஏற்றது போல வனவிலங்கு சரணாலாயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாக செல்கிறது.
காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் சுந்தரவன சதுப்புநிலக் காடுகளைப் பார்க்க முடியும்.
இந்த கப்பல் சுற்றுலாவில் உலகின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடான கங்கா ஆர்த்தி மற்றும் மாயங்களின் நகரம் எனப்படும் மாயோங் போன்ற இடங்களைக் காணலாம். இந்தியக் கலாச்சாரத்தின் பல மூலங்களைக் காணமுடியும். ஆற்றுத் தீவுகளில் மிகப்பெரிய தீவான மாஜுலியையும் காண முடியும்.
இதன் முதல் பயணம் ஜனவரி மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 1ம் தேதி முடியும் என்றும் கூறியுள்ளனர். இதன் பயண வரைபடத்தின் படி 1,100 கிலோ மீட்டர் வங்காள தேசத்தில் பயணிக்கும்.
இந்த பயணத்தின் மூலம் 27க்கும் மேற்பட்ட நதியமைப்புகளையும் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்களையும் பார்க்கலாம். சில உலக பிரசித்தி பெற்றத் தலங்களும் இதில் அடங்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust