கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

"கார்ப்பரேட் உத்திகளை அரசாங்க முன்னுரிமைகளுடன் இணைப்பதுவே இந்தியாவில் வணிகம் செய்வதற்கான வழி." என்கிறார் அதானி. ஆனால் அதற்கு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நபர்களோடு நட்பு இருப்பது அவசியம்.
Gautam Adani
Gautam AdaniTwitter

டாடா, பிர்லாவை 1980களுக்கு முன்னரும், அம்பானி - பாம்பே டையிங் நூஸ்லி வாடியாவை 90 களிலும் கேள்விப்பட்டிருப்போம். இது எம்ஜிஆர் - சிவாஜி, கமல் - ரஜினி போல முதலாளிகளிடையே உள்ள போட்டியினால் ஏற்பட்ட ஜோடிப் பெயர்கள். 2000 ஆம் ஆண்டுகளில் நாம் முகேஷ் அம்பானியோடு கௌதம் அதானியை முதன் முதலாக கேள்விப்படுகிறோம். அதுவும் பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற பிறகே அதானி வெளிச்சத்திற்கு வந்தார். தற்போது அவர்தான் சொத்து மதிப்பில் நம்பர் 1.

அதானி குழுமம் ஒரு அறிமுகம்

கௌதம் அதானிக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் திறமை உண்டு. அவர் இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் பணத்திற்காக கடத்தப்பட்டார். மற்றும் 2008 ஆம் ஆண்டில் 160 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் போது மும்பையின் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலின் பணயக்கைதிகளில் அவரும் ஒருவர்.

அப்போதிருந்து, அவரது வணிக புத்திசாலித்தனமும் தடைகளை சமாளிக்கும் திறனும் அவரை இந்தியாவின் பணக்காரர்களின் வரிசையில் உயர்த்தியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று தேசத்தை இரண்டு ஆண்டுகளில் மந்தநிலையில் மூழ்கடித்தாலும், அதானியின் குழுமம் தொடர்ந்து வளர்கிறது. அவரது குழுமம் உலகளாவிய கூட்டாளிகள் மற்றும் முதலீடுகளைப் பெற்று புதிய துறைகளுக்குள் கால் பதித்திருக்கிறது.

Gautam Adani
Gautam AdaniTwitter

அவரது சுரங்கம், எரிவாயு மற்றும் துறைமுகப் பிரிவுகள் உட்பட அவரது பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டின் மதிப்பு இந்த ஆண்டு ஆறு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் 6 பில்லியன் டாலர் சூரிய சக்தி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable-energy) தயாரிப்பாளராக மாறும் நிறுவனத்தின் இலக்கை நோக்கிய ஒரு படியாகும்.

முதலீட்டு மேலாண்மை நிறுவனமான IIFL செக்யூரிட்டீஸ் லிமிடெட்டின் இயக்குனர் சஞ்சீவ் பாசின் கூறுகையில், "அதானி பங்குகளைப் பொறுத்தவரை சந்தையில் அதை இழந்து விடுவோமோ என்றFOMO சிண்ட்ரோம் வாடிக்கையாளர்களிடம் உள்ளது. எனவே, குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு அதானி குழுமம் முன்னோக்கி செல்லும் பாதை சீராக இருக்கும்.

32.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து மதிப்புடன், சிலிக்கான் பள்ளத்தாக்கின் சில முக்கிய பெயர்களோடு செய்தி தலைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியவர் முகேஷ் அம்பானி. அவருக்குப் பிறகு இந்தியாவின் பணக்காரர் அதானி மட்டுமே ஆவார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, இந்த ஆண்டு மட்டும், பங்கு ஏற்றங்கள் அதானியின் நிகர மதிப்பில் 21.1 பில்லியன் டாலரை சேர்த்துள்ளன. இது அம்பானியின் ஆதாயத்தை விடவும் அதிகம்.

Adani
AdaniTwitter

வைரத் தொழிலிலிருந்து டேட்டா சர்வர் வரை அதானியின் வளர்ச்சி

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய பிறகு, அதானி 1980 களின் முற்பகுதியில் மும்பையின் வைர தொழிலில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். 1988 ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் குழுமத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு தனது சகோதரரின் பிளாஸ்டிக் வணிகத்திற்கு உதவுவதற்காக அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு திரும்பினார். ஒரு பத்தாண்டிற்குப் பிறகு, அவர் அரபிக் கடலின் கடற்கரையில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகத்தை செயல்படுத்தத் தொடங்கினார். இறுதியில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை துறைமுக நிறுவனமாக உருவெடுத்தார்.

அதானி குழுமமானது நாட்டின் மிகப்பெரிய அரசு சாரா மின்சார உற்பத்தியாளராகவும், நிலக்கரி சுரங்கத்தில் முன்னணி நிறுவனமாகவும் மாறியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், அதானி தனது கார்மைக்கேல் வெப்ப-நிலக்கரி திட்டத்திற்கு எதிர்மறையான விளம்பரத்தைத்தான் இன்றும் பெறுகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலிய அரசு நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் ஒரு பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு ஒப்புதல் பெற்றார்.

போட்டி குறைவாக இருக்கும் சில தொழில்களை இந்திய அரசு முன்னேற்ற நினைக்கிறது. மற்ற தொழில்முனைவோரைப் போலவே, அதானியும் மீண்டும் மீண்டும் அரசு சொல்லும் புதிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்துகிறார். இப்போதும் கூட, 58 வயதான அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் ஒரு காரணத்திற்காக, "தேசத்தைக் கட்டியெழுப்புவதை" தனது மூல உத்தியின் முக்கிய காரணியாகக் குறிப்பிடுகிறார்.

Adani - Modi
Adani - ModiTwitter

மும்பையில் உள்ள சாம்கோ செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சித் தலைவர் உமேஷ் மேத்தா கூறுகையில், “அஹமதாபாத்தில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம் செங்குத்தாக வளர்ந்து மற்றும் பல்வகை தொழிலை நடத்தும் ஒரு கூட்டு நிறுவனமாக வளர்ந்த விதம் ஆச்சரியமாக இருக்கிறது. வளர்ச்சி திறன் கொண்ட ஒரு வணிகத்தை உருவாக்கும் எதிர்கால நோக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர். இதற்காக அவர் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார். அது இந்தியாவிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும்."

ஆனால் இந்த ‘ஆசீர்வாதம்’ அம்பானி தவிர மற்ற நிறுவனங்களுக்கோ, முதலாளிகளுக்கோ கிடைப்பதில்லை என்பதும் உண்மை.

முதலமைச்சர் மோடியோடு சேர்ந்து வளர்ந்த முதலாளி அதானி

குஜராத்தியைச் சேர்ந்த மோடி ஆட்சியைப் பிடித்தது போல் அதானியும் இணையாக தனது தொழிலில் உயர்ந்தார். அதானி முந்த்ரா துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளைத் துவங்கியதோடு தனது தொழிற்துறை மண்டலத்தையும் தொடங்கினார். அப்போது மோடி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகளாக மோடியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக அதானி இருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதானி, பாஜகவின் மோடிக்கு முக்கியமான பரவலராகத் திகழ்ந்தார்.

அதானி
அதானிTwitter

அதானி எனும் பில்லியனரின் விரைவான பல்வகைத் தொழில்கள் 2015 இல் தொடங்கியது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த மோடி உறுதியளித்தபோது, ​​​​பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டு சேர்ந்து இராணுவத்திற்கு உபகரணங்களை வழங்குவதற்கான திறனை விரைவாக உருவாக்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எரிவாயு துறையில் நுழைந்தார். இறுதியில் அவரது சாம்ராஜ்யம் எரிபொருள் விநியோகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை விற்பனையாளராக மாறியது. 2019 ஆம் ஆண்டில், அவர் விமான நிலையங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இப்போது அவர் தரவு சேமிப்பு எனப்படும் டேட்டா சர்வர் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளில் நுழைய முயற்சிக்கிறார்.

"மோடியின் கொள்கைகள் குஜராத்திலிருந்த வணிகக் குழுக்களுக்கு உதவியது. அதானி குழுமம் போன்ற கூட்டு நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கு பங்களித்தது" என்று அகமதாபாத்தில் உள்ள மேம்பாட்டு மாற்று மையத்தின் இயக்குநர் இந்திரா ஹிர்வே கூறினார். "கார்ப்பரேட் உத்திகளை அரசாங்க முன்னுரிமைகளுடன் இணைப்பது - இதுவே இந்தியாவில் வணிகம் செய்வதற்கான வழி." என்கிறார் அவர்.

ஆனால் அதற்கு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நபர்களோடு நட்பு இருப்பது அவசியம்.

Gautam Adani
தீவிரமடையும் முகேஷ் அம்பானி VS கௌதம் அதானி வணிக போட்டி - என்ன நடக்கிறது?

சர்வதேச நிதியும், சர்வதே நிறுவனங்களோடு கூட்டும்

பசுமை ஆற்றலை முன்னெடுப்பதால் வெளிநாட்டு வங்கிகளிலிருந்து அதிக அளவில் கடன் வாங்குவதன் மூலம் நிதி திரட்டுவதைத் தொடர்ந்து செய்ய அதானியால் முடிந்தது.

சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி ஜாம்பவான்கள் தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்தி, லாபகரமான இந்திய சந்தையில் ஒரு பகுதியைப் பெற முயற்சிப்பவர்களுக்கு, அதானியின் பேரரசு கவர்ச்சிகரமாக இருக்கிறது. பிரான்சின் எரிசக்தி நிறுவனமான டோட்டல் எஸ்ஏ ஏற்கனவே அதானி கிரீன் மற்றும் விநியோகஸ்தர் அதானி கேஸ் லிமிடெட் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் ஸ்னாம் ஸ்பா ஹைட்ரஜன் மற்றும் பிற தூய்மையான எரிபொருளில் உள்ள வாய்ப்புகளை ஆராய ஒரு மூலோபாய ஒத்துழைப்புடன் அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது.

"ஒரு தொழிலதிபராக, அதானிக்கு அசாதாரண நம்பிக்கையும், கணக்கிடப்பட்ட அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் உள்ளது" என்று கே ஆர் சோக்சி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவன் சோக்சி கூறினார். "சர்வதேச முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தையில் ஏற்கனவே பணம் சம்பாதிக்கும் சொத்துக்களில் அமர்ந்திருக்கும் அதானியை அவர்கள் தவறவிட முடியாது." - இது ப்ளூம்பெர்க் பத்திரிகையின் கருத்து.

இப்படியாக அதானி குழுமம் மோடி அரசின் ஆதரவோடு குஜராத்தில் துவங்கி இந்தியா, உலகம் வரை இன்று ஒரு மிகப்பெரும் குழுமமாகப் பல்துறைகளில் வளர்ந்து வருகிறது. கோவிட் பொது முடக்கத்தில் பல சிறு குறு நடுத்தர தொழில்கள் முடங்கிய போது அதானி போன்றவர்களின் சொத்து மதிப்பும், நிறுவன மதிப்பும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இது உழைப்பின் வளர்ச்சியா இல்லை அரசின் உதவியா என்பது கார்ப்பரேட் உலகமே நன்று அறிந்த செய்தி.

Gautam Adani
கெளதம் அதானி : உலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளிய இந்தியர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com