இறுதி சடங்கில் சிரித்த குடும்பம்: இணையத்தில் வைரலான புகைப்படத்தின் பின்னணி என்ன?

இந்த புகைப்படம் வைரலாக, ஒரு தரப்பினர் அக்குடும்பத்தாரை வசைபாடி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, அவர்கள் செய்தது குற்றம் ஒன்றும் இல்லை என ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இறுதி சடங்கில் சிரித்தபடி புகைப்படம்
இறுதி சடங்கில் சிரித்தபடி புகைப்படம்டிவிட்டர்
Published on

இறுதிச் சடங்கில் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பம் ஒன்றின் புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

நமக்கு மிகவும் நெருக்கமான நபர், நம் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் அதை விட பெரிய மன வலி நமக்கு இருக்காது. இனி அந்த நபர் நம் நினைவுகளில் மட்டும் தான் வாழ்ந்துகொண்டிருப்பார் என்ற ஆறுதலோடு தான் வாழ்க்கை முன் செல்லும்.

இறுதி சடங்குகளில் அந்த வலியை, அவர்களது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாம் அழுகையாக அதை வெளிப்படுத்துவோம். தவறுதலாகக் கூட யாரும் சிரித்துவிட மாட்டார்கள்

ஆனால், இங்கு கேரளாவைச் சேர்ந்த குடும்பம் இறுதி சடங்கில் சிரிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாக, ஒரு தரப்பினர் அக்குடும்பத்தாரை வசைபாடி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, அவர்கள் செய்தது குற்றம் ஒன்றும் இல்லை என ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கேரளா மல்லபள்ளி என்ற இடத்தை சேர்ந்த மூதாட்டி மரியம்மா, 95. இவர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கிற்கு அவரது குடும்பத்தினர் ஒன்று கூடியுள்ளனர். அப்போது, சவப்பெட்டியில் மரியம்மாவின் உடல் வைக்கப்பட்டிருக்க, அதை சுற்றி அமர்ந்த அக்குடும்பத்தினர் அனைவரும், சிரித்துக்கொண்டே, சந்தோஷமாகப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டனர்.

இறுதி சடங்கில் சிரித்தபடி புகைப்படம்
100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்கு - கோவை பெண்ணின் நெகிழ்ச்சி கதை

இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஒருவர் இறந்திருக்கும் சமயத்தில் எப்படி சிரிக்க முடிகிறது என்றும், அது இறந்தவருக்குச் செய்யும் அவமரியாதை என்றும் தெரிவித்தனர். ஆனால், அக்குடும்பத்தினரோ, "இறந்த அந்த மூதாட்டி, 95 வருடங்களாக சந்தோஷமான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். அவரை நாங்கள் அனைவரும் மிகவும் நேசிக்கிறோம். அதனால் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பிவைக்க நினைத்தோம்" என்றனர்.

மேலும், அவரது இறப்புக்குப் பின்னர், அவர்களது பாட்டி குறித்த நல்ல, சந்தோஷமான விஷயங்களை மட்டுமே நினைவுகூர விரும்புவதாகவும் தெரிவித்தனர். மரணத்தின் போது, அழுகையை மட்டுமே பழகியவர்களுக்கு, இது ஏற்றுக்கொள்ள முடியாத படி தான் இருக்கும்.

மேலும் தங்களது நினைவுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எப்படியோ வெளியாட்களால் லீக் ஆகிவிட்டது, எனினும், இச்செயலுக்கு நாங்கள் வருந்தவில்லை எனவும் தெரிவித்தனர்.

கேரளா கல்வித்துறை அமைச்சர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், யாரும் அக்குடும்பத்தினரைக் கடிந்துகொள்ளவேண்டாம் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

"மரணம் வலிகள் நிறைந்தது தான். ஆனால், அது ஒருவரை வழியனுப்பிவைக்கும் நிகழ்வும் கூட. மகிழ்ச்சியாக வழியனுப்பி வைப்பதை விட சந்தோஷம் வேறு இருக்கிறதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்

இறுதி சடங்கில் சிரித்தபடி புகைப்படம்
இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி: எப்போதும் முழுமரியாதையோடு உதவும் நாசர் - நெகிழ்ச்சி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com