இந்தியாவின் இணைப்பு மொழியாக தற்போது ஆங்கிலம் உள்ள நிலையில், அந்த இடத்திற்கு இந்தியைக் கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அதாவது இந்தி மொழியை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல், திரைப்பிரபலங்களுக்கும் இந்த இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து இணையத்தளத்தில் பேசு பொருளாக மாறி, தொடர்ந்து தமிழின் புகழை பாடும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேர்மறையான வரவேற்புகள் கிடைத்தன.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயதிரி ரகுராம், தனியார் சேனல் ஒன்றிருக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஏ. ஆர்.ரஹ்மான் கூறுவதை முழுக்க நான் ஆதரிக்கிறேன், அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெருமையாக எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார். அதேபோல் இனிமேல் இந்தி படங்களுக்கு பாடல் பாடும் போதும், அதை தமிழில் பாட வேண்டும். அதன் மூலம் இந்தி மக்கள் தமிழ்மொழியை கற்று கொள்வார்கள். அது தானே இணைப்பின் தொடக்கம் என்று கிண்டலாக பேசியுள்ளார்.
ஜெய் ஹோ என்ற இந்தி பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை வென்றார். அப்போது நான் இந்தப் பாடலை தமிழில் பாடவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்று கூறினாரா? என்ற கேள்வியையும் காயத்ரி ரகுராம் எழுப்பினார்.
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக்கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும் என்று ஏ.ஆர். ரகுமான் குறித்து காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். இதனால் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் காயத்ரிக்கு கண்டனங்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.