மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கூகுள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஒருவரை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணேஷ் சங்கர் என்பவர் போபாலில் கூகுள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஐஐஎம் ஷில்லாங்கில் எம்பிஏ படிக்கும் போது, போபாலில் வசிக்கும் சுஜாதா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து போபாலுக்கு வரவழைத்து, சுஜாதாவை திருமணம் செய்து கொள்ள வலுக்கட்டாயமாக போதைப் பொருள் கொடுத்ததாக சங்கர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினர் சங்கரை வரவழைத்தபோது, ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை காண்பித்து அவர்கள் ரூ.40 லட்சம் கேட்டு சங்கரை மிரட்டியுள்ளனர்.
பணம் தராவிட்டால் பொய் வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர்.
இந்த சம்பவம் கமலா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், சுஜாதா, அவரது தந்தை கமலேஷ் சிங், அவரது சகோதரர் ஷைவேஷ் சிங் மற்றும் அவரது மைத்துனர் விஜேந்திர குமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கமலா நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் அனில் குமார் வாஜ்பாய் தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust