Uttarakhand : பேரக்குழந்தை வேணும்; இல்ல 5 கோடி வேணும் - மகன் மீது வழக்கு பதிவு

உத்தராகாண்ட் மாநிலத்தில் தங்களுக்கு பேரக்குழந்தை வேண்டும் என்று மகன், மருமகள் மீது தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SR Prasad
SR PrasadTwitter
Published on

வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் பொருளாதார சூழல், உடல் ஆரோக்கியம், வயது ஆகியவற்றை காரணம் காட்டி தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப்போடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதற்கு சில குடும்பத்தினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உத்தராகண்டைச் சேர்ந்த எஸ்.ஆர்.பிரசாத் என்பவர் பேரக்குழந்தை வேண்டும் என்பதற்காக மகன், மருமகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தை வேண்டும், இல்லையெனில் இருவரிடம் இருந்து தலா ரூ.2.5 கோடி என 5 கோடி இழப்பீடு வேண்டும் என அவர் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SR Prasad Family
SR Prasad FamilyTwitter

இதுதொடர்பாக எஸ்.ஆர்.பிரசாத், பேரக்குழந்தைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது மகனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடத்தி வைத்ததாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம் தனது மகன் அமெரிக்காவில் வேலைக்கான பயிற்சி பெறுவதற்காகத் தனது பணத்தை முழுவதுமாக கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் வீடு வாங்க கடன் பெற்றுள்ளதால் பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் சிக்கலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இவர்களின் வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா இது குறித்துக் கூறுகையில்,

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செலவு செய்து சிறந்த நிறுவனங்களில் வேலை செய்யும் திறனை உருவாக்குகிறார்கள்.எனவே குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு அடிப்படையான நிதியுதவியைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

SR Prasad
இறந்துவிட்டதாக அடக்கம் செய்த திருடன் - 9 மாதங்களுக்கு பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com