குஜராத் : 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' தலைப்பில் பேச்சுப்போட்டி - அதிகாரி இடைநீக்கம்

குஜராத்தில் 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்திய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் : 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' தலைப்பில் பேச்சுப்போட்டி -  அதிகாரி இடைநீக்கம்

குஜராத் : 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' தலைப்பில் பேச்சுப்போட்டி - அதிகாரி இடைநீக்கம்

NewsSense

என்ன நடந்தது? யார் அந்த அதிகாரி?

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டைச்சேர்ந்த மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி மிதாபென் கவ்லி, 5-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தியுள்ளார்.

'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த போட்டி அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

திங்கள்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கோட்சேவை நாயகன் ஆக்கும் வேலையை இந்த அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து, அந்த அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணி இடை நீக்க உத்தரவு

"பொறுப்பான அரசு அதிகாரியாக இருந்தும் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது" என அவருக்கான பணி இடை நீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,“காந்திநகரில் உள்ள கலாச்சாரத் துறையின் உயர் அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைநடைபெற்று வருகிறது,” என்றார்.

<div class="paragraphs"><p>குஜராத் : 'மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே' தலைப்பில் பேச்சுப்போட்டி -  அதிகாரி இடைநீக்கம்</p></div>
வலிமை நாயகி Huma S Qureshi - அட்டகாச புகைப்படங்கள் | Visual Story

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com