ஓமன் நாட்டில் சிக்கிய 21 வயது பெண்; மீட்க உதவிய ஹர்பஜன் சிங் - என்ன நடந்தது?

ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ராஜ்ய சபா எம் பி ஆக இருக்கும் ஹர்பஜன் சிங் சமீபத்தில் வேறொரு நாட்டில் மாட்டிக்கொண்ட 21 வயது பெண்ணை மீட்டு இந்தியா அழைத்து வர உதவியிருக்கிறார்.
Harbajan SIngh
Harbajan SInghTwitter
Published on

ஓமன் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 21 வயது இந்திய பெண்ணை மீட்டிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங். சுழற்பந்து வீச்சாளரான இவர், இந்திய அணிக்காக 1998 முதல் 2016 வரை விளையாடினார். மேலும் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வந்தவர் சில காலம் முன்பு ஓய்வு பெற்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ராஜ்ய சபா எம் பி ஆக இருக்கும் ஹர்பஜன் சிங் சமீபத்தில் வேறொரு நாட்டில் மாட்டிக்கொண்ட 21 வயது பெண்ணை மீட்டு இந்தியா அழைத்து வர உதவியிருக்கிறார்.

பத்திரமாக தன் வீட்டிற்கு திரும்பிய அந்த பெண், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தனது அனுபவங்களை பற்றி கூறினார்.

பஞ்சாப் பதிண்டா என்ற இடத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சிக்கந்தர். இவருக்கு மூன்று குழந்தைகள். இவரது மூத்த மகளுக்கு 21 வயது. குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை தேடி கொண்டிருந்த அப்பெண்ணுக்கு ஜக்சீர் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது.

இவர் ஓமன் நாட்டில் வாழும் இந்திய குடும்பம் ஒன்று சமையலுக்கு ஆள் தேடி வருவதாகவும், அந்த வேலையை இவருக்கு வாங்கிக் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும் இவர் சிறப்பாக பணியாற்றும் பட்சத்தில் சிங்கப்பூர் அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பும் கிட்டும் என தெரிவித்திருக்கிறார்.

இதனால் கடந்த மாதம் ஓமனுக்கு சென்றார் அப்பெண். " நான் அந்நாட்டில் காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து, ஏதோ சரியாக இல்லை எனத் தோன்றிக்கொண்டிருந்தது. என்னை கூட்டிசெல்ல வந்தவர் மீதும் சந்தேகம் அதிகரித்தது" என்றார்.

Harbajan SIngh
நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் குழியில் சிக்கி இளைஞர் பலி - எங்கே ?

அப்பெண் சந்தேகித்தது போலவே, சொன்ன இடத்திற்கு கூட்டிசெல்லாமல், ஒரு அலுவலகத்தில் அவரை காத்திருக்கும்படி கூறியுள்ளனர். அங்கு பொறுப்பிலிருந்த இருவர் தன்னிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் சிம் கார்டை பரித்ததாக தெரிவித்த அவர், தனக்கு இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனக் கூறினார். மேலும் இவரை தவிர அங்கு 20 பெண்கள் அடிமைகளாக மாட்டிக்கொண்டிருந்தனர் எனவும் தெரிவித்தார்.

தைரியத்தை வரவழைத்து, புதிய சிம் கார்டை வாங்கிய அந்த பெண், அங்கிருந்து தன் தந்தையை தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார். "இங்கும் எல்லாம் தப்பாக இருக்கிறது. நான் இங்கிருந்து தப்பவேண்டும், என்னை காப்பாற்றுங்கள்" எனக் மகள் கூறியதாக சிக்கந்தர் தெரிவித்தார்.

Representational Image
Representational Image

சிக்கந்தர், இவர்களுக்கு உதவிய ஜக்சீரை அணுகியபோது, அவரை மிரட்டி, 2.5 லட்சம் ரூபாய் பணம் தருமாறு கேட்டிருக்கிறார் ஜக்சீர்.

"என் மகளை அங்கு அவர்கள் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். என் மகளின் பாதுகாப்பு குறித்து பயம் ஏற்பட்டது. இதனால், என் வீட்டை அடைமானம் வைத்து அவர்கள் கேட்ட 2.5 லட்சம் ரூபாயை நான் கொடுத்தேன்." என்றார் சிக்கந்தர்.

பின்னர் தனது சகோதரர் மூலமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை தொடர்புகொண்டுள்ளார் சிக்கந்தர்.

உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு, அப்பெண்ணை மீட்க ஏற்பாடுகளை செய்துள்ளார் ஹர்பஜன்.

"நான் இந்தியாவிற்கு திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானம் ஏற 3 மணி நேரம் முன்னதாக தான் என் பாஸ்போர்ட்டையும் சிம் கார்டையும் என்னிடம் கொடுத்தனர்" என்றார் அந்த பெண்.

மேலும் இந்தியா வந்தடைந்ததும், நான் வீட்டிற்கு பத்திரமாக வந்தடைந்தேனா என்று தூதரக அதிகாரிகள் தெரிந்துகொண்டனர் எனக் கூறிய அவர், ஹர்பஜன் ஜி-க்கு எவ்வளவு நன்றியை தெரிவித்தாலும் அவரின் உதவிக்கு அது ஈடாகாது என்றார்.

"நம் நாட்டின் மகள் வேறு நாட்டில் அடிமையாக இருக்கிறாள் எனத் தெரிந்தால் நாம் அதை எளிதில் எப்படி விட முடியும்? நான் என் கடமையை தான் செய்தேன். உண்மையில் பேருதவியாக இருந்தது இந்திய தூதரகம் தான்" என ஹர்பஜன் சிங் கூறினார்.

தன்னைப் போலவே அங்கு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் மற்ற பெண்களையும் காப்பாற்றவேண்டும் என அப்பெண் தெரிவித்திருக்கிறார்

Harbajan SIngh
Ukraine War : அமெரிக்காவிலிருந்து சென்று உக்ரைனில் சிக்கியிருந்த மகளை மீட்ட தந்தை !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com