ஹரியானா: துப்பாக்கியுடன் வந்த குண்டர்களை துடைப்பத்தால் துரத்திய பெண் - வீடியோ உள்ளே

ஹரி கிருஷ்ணன் என்பவரைத் துப்பாக்கியால் ரௌடிகள் சுட்டுள்ளனர். அவரைக் காப்பாற்றும் வண்ணம் துடைப்பத்தால் ரௌடிகளை எதிர்த்துள்ளார் இந்த பெண்!
ஹரியானா: துப்பாக்கியுடன் வந்த குண்டர்களை துடைப்பத்தால் துரத்திய பெண் - வீடியோ உள்ளே
ஹரியானா: துப்பாக்கியுடன் வந்த குண்டர்களை துடைப்பத்தால் துரத்திய பெண் - வீடியோ உள்ளேTwitter

ஹரியானாவைச் சேர்ந்த பெண் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறார். அவரது செயல் இணையவாசிகள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

துப்பாக்கியுடன் எதிர்த்த ரௌடிகளை துடைப்பத்தால் ஓடவிட்டுள்ளார் அவர்.

ஹரி கிருஷ்ணன் என்பவரைத் துப்பாக்கியால் ரௌடிகள் சுட்டுள்ளனர். அவரைக் காப்பாற்றும் வண்ணம் துடைப்பத்தால் ரௌடிகளை எதிர்த்துள்ளார் இந்த பெண்!

கடந்த நவம்பர் 27ம் தேதி, ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் ஒரு காலை நேரம் ஹரிகிருஷ்ணன் சாதாரணமாக தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கிறார்.

வைரலாகும் வீடியோவில் காணப்படுவதன் படி, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அவரைத் துப்பாக்கியால் தாக்கியிருக்கின்றனர்.

துப்பாக்கியுடன் வந்த குண்டர்களிடம் இருந்த தப்பிக்க தனது வீட்டினுள் ஓடினார் ஹரிகிருஷ்ணன். மொத்தமாக 9 முறை அவர்கள் சுட்டத்தில் ஹரிகிருஷ்ணன் காயமடைந்தார்.

ஹரிகிருஷ்ணன் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது துடைப்பத்துடன் வந்து ரௌடிகளை விரட்டியிருக்கிறார் இந்த பெண்மணி.

ஹரியானா: துப்பாக்கியுடன் வந்த குண்டர்களை துடைப்பத்தால் துரத்திய பெண் - வீடியோ உள்ளே
Karungali Malai: இதை போட்டுக்கொண்டால் பணம் கூரைய பிச்சுகிட்டு கொட்டுமா? வைரல் மீம்ஸ்

ஹரிகிருஷ்ணன் பாக்ஸர் ரவி என்பவரின் கொலையில் தொடர்புடையவர். சமீபத்தில் தான் பெயிலில் வந்திருக்கிறார். இவருக்கு கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 3 மாதங்களுக்கு முன்னர் ஹரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டதாக சந்தேகித்த 5 பேரை காவலர்கள் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com