இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ப்ராக்பூர் கிராமம் பாரம்பரிய கிராமமாக அறியப்படுகிறது. இந்த பகுதி வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு வாழும் சான்றாக உள்ளது.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட ப்ராக்பூர், அதன் அண்டை கிராமமான கார்லியுடன் சேர்ந்து, 1997 இல் ஹிமாச்சல பிரதேச மாநில அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக "பாரம்பரிய கிராமமாக" நியமிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமமாக மாறியது.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜஸ்வான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி பராக் டீயின் நினைவாக ப்ராக்பூர் நிறுவப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ப்ராக்பூர் ஒரு அலங்கார கிராமமாக உருவாக்கப்பட்டது.
இன்று, கிராமத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, நாம் டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்குள் காலடி எடுத்து வைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
கற்காலப் பாதைகளில் நடந்து, பழைய கடைகளையும், கூரைகள் கொண்ட வீடுகளையும், மண் பூசப்பட்ட சுவர்களையும், நீங்கள் காணலாம்.
இந்த கிராமத்தின் கட்டிடக்கலை அழகை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஜட்ஜ்ஸ் கோர்ட் போன்ற சில கட்டிடங்கள் இந்த கிராமத்தில் உள்ளன. இது ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியை வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மறுசீரமைப்பு வீடுகளும் இதே போன்ற கட்டிடக்கலையை பிரதிபலிக்கின்றன.
ப்ராக்பூருக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அண்டை கிராமமான கார்லிக்கும் செல்கின்றனர்.
ப்ராக்பூர் இப்போது ஒரு அலங்கார கிராமம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ப்ராக்பூரில் வசிப்பவர்களுக்கு பல திறமைகள் உள்ளன. இங்கு கைவினைஞர்கள், நெசவாளர்கள், கூடை தயாரிப்பாளர்கள், வெள்ளித் தொழிலாளிகள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், தையல்காரர்கள் உள்ளனர்.
பாரம்பரிய பொருட்கள் நிறைந்த உள்ளூர் சந்தைகளை நீங்கள் பார்வையிடலாம். இது நினைவு பரிசு சேகரிப்பாளர்களுக்கு புகலிடமாக உள்ளது.
ப்ராக்பூர் பாரம்பரிய கிராமம் அதன் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust