CoronaXBB: இந்தியாவில் புதிய தொற்று? Fake News என உறுதிப்படுத்திய சுகாதார துறை| Fact Check

மேலும் இந்த ஓமிக்ரான் XBB வைரஸ், டெல்டா வகை வைரஸை விட ஐந்து மடங்கு அதிக பரவும் தன்மையுடையது எனவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
Corona
CoronaNewsSense

உருமாறிய கொரோனா ஓமிக்ரான் XBB திரிபு வைரஸ் பரவி வருவதாகவும், இது உயிர்கொல்லி வைரஸ் வகை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற செய்தி ஒன்று வாட்ஸ் அப் இல் பரவி வருகிறது.

இது போலியான செய்தி என இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சீனாவில் ஓமிக்ரான் BF.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து, சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை வைரஸ் பரவியுள்ளதால், மீண்டும் பொது முடக்கம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதில்,

“உயிர்கொல்லி கோவிட் ஓமிக்ரான் XBB திரிபு வைரஸ் பரவி வருகிறது. இது எளிதில் கண்டறியப்பட முடியாத வகை வைரஸ் ஆக இருப்பதால் அனைவரும் கொரோனா கால கட்டுபாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Corona
இளையராஜாவை சந்தித்தாரா சுந்தர் பிச்சை? | Fact Check

மேலும் இந்த ஓமிக்ரான் XBB வைரஸ், டெல்டா வகை வைரஸை விட ஐந்து மடங்கு அதிக பரவும் தன்மையுடையது எனவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

ஓமிக்ரான் XBB அறிகுறிகள்:

காய்ச்சலோ, இருமலோ இருக்காது. ஆனால் மூட்டு வலி, தலைவலி, கழுத்து, பின் கழுத்து பகுதிகளில் அதிக வலி இருக்கும். மூக்கின் வழியாக சோதனை மேற்கொண்டால், வைரஸ் கண்டறிய முடியாது எனவும், நேராக நுரையீரலை இது தாக்கும்.

இந்த வகை வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு வலி இருக்காது ஆனால், நிமோனியா தாக்கம் இருக்கும். இதனால் மூச்சுக் குழாயில் பாதிப்புகள் ஏற்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் அதிகமாக இந்த செய்தி பரவி வருவதை அடுத்து மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், மத்திய சுகாதார துறை இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறது.

சுகாதார துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “ வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த செய்தி பொய்யானது மற்றும் தவறாக வழினடத்தும் விதத்தில் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் மக்கள் இதனால் பீதியடை வேண்டாம் எனவும் கூறியுள்ளது. கோவிட் ஓமிக்ரான் BF.7 திரிபு வைரஸ் தொற்று இந்தியாவில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Corona
உத்தரபிரதேசம் : யோகி திறந்து வைக்கும் ரோலர்கோஸ்டர் பாலம் - உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com