பெங்களூர் டிராஃபிக்கிற்கு GOOD BYE : ஹெலிகாப்டர் டாக்சி அறிமுகம் - ஒரு ரைடுக்கு எவ்வளவு?

பெங்களூரில் கார் டாக்சி, பைக் டாக்சி, டிராக்டர் டாக்சி எனப் பல இருக்கும் நிலையில் இந்த ஹெலிகாப்டர் டாக்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Helicopter Ride
Helicopter RideTwitter

பெங்களூரூ என்று கூறினால் நம் நினைவிற்கு வருவது ஐடி நிறுவனங்கள், அடுத்ததாக அங்கு நிலவும் டிராஃபிக்.

சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் கடுமையான மழை பெய்து, நகரின் முக்கிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அப்போது மக்கள் படகு, ஸ்பீடு போட், டிராக்டர், ஜேசிபி இயந்திரங்களில் 50 ரூபாய் கட்டணத்தில் பயணித்து வந்தது நாம் அறிந்த ஒன்றே. தற்போது மழை வெள்ளம் சரியாகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த டிராபிக் பிரச்னை எப்போது தீரும் என பெங்களூர்வாசிகள் புலம்பிக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் விதமாக Fly Blade நிறுவனம் ஒரு புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Fly Blade நிறுவனம் புதிதாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Helicopter Ride
“இனி மனிதர்களே தேவையில்லை, வருகிறது ரோபோ டாக்சி” - எலன் மஸ்க் அறிவிப்பு

கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

வார நாட்களில் மட்டும் அளிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் டாக்சி ஒரு முறை பயணம் செய்ய 3,250 ரூபாய் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் கட்டமாக இந்த சேவை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதியில் தொடங்கவுள்ளது.

பெங்களூரில் கார் டாக்சி, பைக் டாக்சி, டிராக்டர் டாக்சி எனப் பல இருக்கும் நிலையில் இந்த ஹெலிகாப்டர் டாக்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Helicopter Ride
உலகைச் சுற்றி சாகச 'நடை பயணம்' - 2 நாடுகளில் சிறை தண்டனை? 24 வருட பயணக் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com