Matrimony-ல் லிங்க் அனுப்பிய பெண் - கடுப்பான அப்பாவின் வைரல் ஸ்க்ரீன்ஷாட்

அப்பாவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அந்த பெண், “ஹீ ஹீ” என மெஸ்ஸேஜ் அனுப்பியிருக்கிறார் அந்த லிட்டில் பிரின்சஸ். இந்த அரட்டை புகைப்படம் கடந்த 3 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Representational Girl
Representational GirlCanva
Published on

பெங்களூரைச் சேர்ந்த பெண் உதித் பால். இவர் ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனத்தின் இணை நிறுவனர். இவர் இணையத்தில் வரன் பார்க்கும் தளத்தில் மாப்பிள்ளை ஒருவருக்குத் தனது நிறுவனத்தில் வேலைக் கொடுக்க முயன்றது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.


என்ன நடந்தது

சால்ட் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனர் உதித்தின் தந்தை அவருக்கு வாட்ஸ் அபில் அனுப்பிய மெஸ்ஸேஜ் தான் தற்போது வைரலாகியிருக்கிறது.

அந்த மெஸ்ஸேஜில் கோவமான அவரது தந்தை. “உடனடியாக உன்னுடன் பேச வேண்டும், பைத்தியக்கார பெண்ணே, நீ என்ன செய்ற தெரியுமா?. மெட்டரிமொனியல் சைட்டில் வேலைக்கு ஆள் எடுக்கக் கூடாது, அந்த பையனின் அப்பா கிட்ட என்ன சொல்லுறது? நீ இன்டர்வியூ லின்க் அனுப்பி அவர் கிட்ட ரெஸியூம் கேட்டதை பாத்தேன்” என வரிசையாக மெஸ்ஸேஜ் அனுப்புகிறார்.

அப்பாவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அந்த பெண், “ஹீ ஹீ” என மெஸ்ஸேஜ் அனுப்பியிருக்கிறார். அதன் பின் 7 வருட ஃபின்டெக் அனுபவம் உள்ளவர். அதனால் தான் எடுக்கிறோம்” என பாவமாக கூறுகிறார் அந்த லிட்டில் பிரின்சஸ். இந்த அரட்டை புகைப்படம் கடந்த 3 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலைக்கு அந்த நபர் எடுக்கப்பட்டாரா?

அப்பாவிடம் திட்டு வாங்கிய உதித் பாலின் வரன் பார்க்கும் தளத்தின் கணக்கை நீக்கியிருக்கிறார் அவரது தந்தை.

அத்துடன் இன்டர்வியூ அழைக்கப்பட்டவரும் வருடத்துக்கு 62 லட்சம் சம்பளம் கேட்டதால் அவரையும் எடுக்க முடியாமல் போயிருக்கிறது.

இவற்றையும் அந்த ட்விட்டின் கமெண்டிலேயே சொல்லியிருக்கிறார் உதித்.

வரன் பார்க்கும் தளம் சொன்னது என்ன?

உதித்தின் ட்விட்டுக்கு ரிப்ளை செய்த ஜீவன்சதி எனும் அந்த வலைதளம், “உங்களிடம் இன்னும் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள், சரியான மணமகனை நாங்கள் பரிசீலிக்கிறோம்” என ட்விட் செய்தது.

இதற்கு உதித், “எனக்கு ஒரு மாதம் இலவசமாக சேவை கொடுங்கள்; நான் தேடிப் பார்க்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.

உதித்தின் இந்த வைரல் ஸ்கிரீன் ஷாட்டுக்கு வந்த சில நகைச்சுவை கமெண்ட்களைக் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com