ராகுல் காந்தி : “சரஸ்வதி எந்த பேதமும் பார்த்ததில்லை” - ஹிஜாப் விவகாரத்தில் கருத்து

``கல்வியின் பாதையில் ஹிஜாப்புக்கு இடையூறு கொண்டு வருவதன் மூலமாக, நம் நாட்டு மகள்களின் எதிர்காலத்தைத் திருடிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் கடவுளான சரஸ்வதி, அனைவருக்கும் பொதுவாகவே அறிவை தந்திருக்கிறார். அதில் அவர் எந்த பேதமும் பார்க்கவில்லை"
ராகுல் காந்தி

ராகுல் காந்தி

NewsSense

Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹிஜாப் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,``கல்வியின் பாதையில் ஹிஜாப்புக்கு இடையூறு கொண்டு வருவதன் மூலமாக, நம் நாட்டு மகள்களின் எதிர்காலத்தைத் திருடிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் கடவுளான சரஸ்வதி, அனைவருக்கும் பொதுவாகவே அறிவை தந்திருக்கிறார். அதில் அவர் எந்த பேதமும் பார்க்கவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ``பிரிவினை வாதத்தைப் புகுத்தும் வேலையை ராகுல் காந்தி செய்து வருகிறார். கல்வி கற்க ஹிஜாப் அவசியம் என்றால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஹிஜாப் அவசியம் என ஏன் அறிவிக்கவில்லை?" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

NewsSense

ஹிஜாப் அணிய எதிர்ப்பு

இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியுசி கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் தர்மபுரி எம்.பி. டி.என்.வி. செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
கார்த்தி சிதம்பரம்: “ஹிஜாபை எதிர்க்கும் நீங்கள் சீக்கியர்கள் டர்பனில் கை வைக்க முடியுமா?”

கார்த்தி சிதம்பரம் கருத்து


காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இது தொடர்பாக பகிர்ந்துள்ள ட்வீட்டில், “ஹிஜாப்பை தடை செய்வது என்பது மாணவியரின் உடையை சீர்படுத்துவதற்காக அல்ல. அதை சாக்காக வைத்து, உங்களை நாங்கள் குறி வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று இஸ்லாமை பின்பற்றும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரிக்கை விடுகின்றனர்.

இஸ்லாமியர்களை எதிர்க்கும் இவர்களால்.. அதே எதிர்ப்பை வகுப்பிற்கு டர்பன் அணிந்து வரும் சீக்கியருக்கு எதிராக செய்ய முடியுமா?,” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com