”மே வந்தாலும் டிசம்பர் போலவே இருக்கிறது” - கடுங்குளிரில் அவதிப்படும் இமாச்சல பிரதேச மக்கள்

மாறிவரும் காலநிலையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Himachal Receives Snow And Rainfall, Weather Office Issues Alert
Himachal Receives Snow And Rainfall, Weather Office Issues Alert Twitter
Published on

இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

சிம்லாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலை இயல்பை விட 7 முதல் 8 டிகிரி குறைவாக இருந்தது. மே மாதம் என்றாலும், இன்னும் டிசம்பர் மாதத்தைப் போலவே இருப்பதாக நகரவாசிகள் கூறுகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலையும் வழக்கத்தை விட இரண்டு முதல் எட்டு டிகிரிக்கு குறைவாக உள்ளது.

லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கோண்ட்லா மற்றும் கீலாங்கில் 5.5 செமீ - 3.2 செமீ பனியும், சம்பாவில் உள்ள பார்மூரில் 30 மிமீ மழையும், மண்டியின் ஜோகிந்தர்நகரில் 19 மிமீ மழையும், குலுவின் பஞ்சரில் 18.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் ரோஹ்தாங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதையை சுற்றி கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Himachal Receives Snow And Rainfall, Weather Office Issues Alert
சென்னை: 200 ஆண்டுகளுக்கு முன்பே வந்த பனிப்பொழிவு குறித்து உங்களுக்குத் தெரியுமா?

மணாலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் பனிப்பொழிவு பெய்து வருகிறது.

மாறிவரும் காலநிலையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூர் வானிலை அலுவலகம் மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் லேசான மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Himachal Receives Snow And Rainfall, Weather Office Issues Alert
கொரோனாவுக்கு அடுத்த ஆபத்து : அண்டார்டிகாவில் மைக்ரோபிளாஸ்டிக் பனிப்பொழிவு - எச்சரிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com