வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பதால் மன அழுத்தம் குறையுமா? வேறு என்ன நன்மைகள் கிடைக்கிறது?

இப்படி செல்லபிராணிகள் வீட்டில் வளர்பதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்மை கிடைக்கும் என்கின்றனர். செல்லபிராணிகளால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
How pets contribute to your mental health and happiness
How pets contribute to your mental health and happinessTwitter
Published on

செல்லபிராணிகளை வீட்டில் உள்ளவர்கள் ஒரு குழந்தை போன்று வளர்க்கின்றனர். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளும் குழந்தைகளை போன்று சேட்டை செய்வது, விளையாடுவது என வீட்டில் சுறுசுறுப்பாக இருக்கும்.

இப்படி செல்லபிராணிகள் வீட்டில் வளர்பதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்மை கிடைக்கும் என்கின்றனர். செல்லபிராணிகளால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

மன அழுத்தம் குறையும்

அளவு கடந்த அன்பு கிடைக்கும் போது நாம் அங்கு ஒரு விதமான உணர்வை உணர்வோம் அல்லவா? மனிதர்களுக்கு மட்டுமல்ல கள்ளம் கபடமில்லாமல் அன்பை அள்ளித்தரக் கூடிய செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம் குறைத்து மன அமைதி கிடைக்கும். அவைகளின் செயல்பாடுகள் நாம் இருக்கும் சுற்றுச் சூழலையும் அழகாக்கும்.

ஆக்டிவ்வாக இருப்பீர்கள்

நாள் முழுக்க வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும்பொழுது ஆசையாக நம் மீது தவழும் செல்லபிராணிகளை கண்டு மகிழாத மனித மனமே கிடையாது.

எடுத்துகாட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால் நாம் வாக்கிங் செல்ல சில சமயங்களில் சோம்பேரித்தனம் படுவோம். ஆனால் நாம் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் செல்வோம் அல்லவா? வாக்கிங் போகும்பொழுதும் கூட அவை போகும் போக்கில் நாம் போவோம். எங்கிருந்து தான் அந்த சுறுசுறுப்பு நம்மிடம் வரும் என்றே தெரியாது!

மனநிலை மாறும்

பொதுவாக எதோ ஒரு விஷயத்தால் சோகமாக இருக்கிறோம் என்றால், நம் அருகில் செல்ல பிராணிகள் விளையாடும் போது நம்மை அறியாமல் உதட்டோரத்தில் புன்னகைப்போம். அதன்பின்னர் நம் மனநிலையே மாறும்.

செல்லப்பிராணியுடன் பேசுவது, விளையாடுவது போன்றவை மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து மனநிலை மேம்பட செய்கிறது.

தனிமை உணர்வு குறையும்

தனியாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல் சிலர் கூட்டமாக இருந்தாலும் எதோ ஒரு விஷயத்தால் தனிமையை உணர்வார்கள்.

அப்படி இருப்பவர்கள் உடனடியாக செல்லப்பிராணி ஒன்றை வாங்குங்கள். அதன் அன்பும், துறுதுறு விளையாட்டும் தனிமையை முற்றிலுமாக போக்க பெரிதளவில் உதவும். நிச்சயம் பேட்டராக உணர்வீர்கள்

How pets contribute to your mental health and happiness
பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

ரத்த அழுத்தம் குறையும்

செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள் ரிலாக்ஸ்சேஷனை அதிகரிப்பதால் அவை ரத்த அழுத்ததை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குழந்தைகளுக்கு நன்மை

செல்லப்பிராணியுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

How pets contribute to your mental health and happiness
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com