ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி மாற்றுவது?

பல்வேறு அரசு சேவைகளுக்கு அத்தியாவசியமான பங்கை ஆதார் கார்டு வழங்கி வருகிறது. உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி மாற்றுவது?
ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி மாற்றுவது?Twitter

ஆதார் அட்டை, இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய பிரதானமான ஆவணமாக மாறிவிட்டது. அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் அட்டையே முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது.

ஆதாரில் கொடுக்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் பல தளங்களில் சரிபார்ப்புச் செயலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வங்கிக் கணக்கை தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது முதல் ஐடிஆர் தாக்கல் செய்வது வரை அனைத்திற்கும் உங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு அரசு சேவைகளுக்கு அத்தியாவசியமான பங்கை ஆதார் கார்டு வழங்கி வருகிறது. உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

ஆன்லைனிலோ அல்லது ஆதார் சேவை மையத்திலோ கிடைக்கக்கூடிய என்ரோல்மென்ட் படிவத்தை (Enrollment form) நிரப்ப வேண்டும்.

படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு, ஆதார் சேவை மையத்தின் நிர்வாகி உங்களுடைய புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்.

பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதிய புகைப்படத்துடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

UIDAI -இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் லாகின் செய்து கொள்ளுங்கள்.

My Aadhaar செக்க்ஷனில் காணப்படும் ‘டவுன்லோட் ஆதார்’ (Download Aadhaar) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இ-ஆதார் டவுன்லோட் செய்வதற்கு ‘ஆதார் நம்பர்’ (Aadhaar Number), ‘என்ரோல்மெண்ட் ஐடி’ (Enrolment ID) போன்ற முறைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் தேர்வு செய்த ஆப்ஷனின் அடிப்படையில் தேவையான விவரங்களை என்டர் செய்யுங்கள்.

பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-யை என்டர் செய்யுங்கள்.

பாஸ்வேர்டு மூலமாக பாதுகாக்கப்பட்ட இ-ஆதார் இப்பொழுது டவுன்லோடு ஆகிவிடும்.

UIDAI -இன் படி, உங்கள் பெயரில் உள்ள முதல் நான்கு எழுத்துக்கள் (கேப்பிடல் எழுத்துகளில்) மற்றும் உங்களது பிறந்த வருடம் இ-ஆதாரை திறப்பதற்கான பாஸ்வோர்ட் ஆகும்.

ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி மாற்றுவது?
உங்கள் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துகிறார்களா? எப்படி தெரிந்துகொள்ளலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com