Sundar Pichai : “இந்தியா என்னில் ஒரு பகுதி” பத்ம பூஷன் விருதை பெற்றார் கூகுள் சிஇஓ!

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. நான்கு பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 117 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பத்ம பூஷன் விருதை பெற்றார் கூகுள் சிஇஓ!
பத்ம பூஷன் விருதை பெற்றார் கூகுள் சிஇஓ!ட்விட்டர்
Published on

கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து இந்த விருதினை சுந்தர் பிச்சைக்கு வழங்கினார்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்று பத்ம பூஷன். இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இந்திய அரசு கடந்த ஜனவரி 25 ஆம் தெதி அறிவித்திருந்தது.

128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. நான்கு பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 117 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் ஒருவர் கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை. நேற்று இந்திய தூதர் தரன்ஜித் சிங் விருதினை சுந்தர் பிச்சையிடம் சான் ஃபிரான்சிஸ்கோவில், அவரது நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் வழங்கினார்.

மதுரையில் பிறந்து, உலகின் பெரு நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைவராக நியமிக்கப்பட்டு, இன்றுவரை நாட்டிற்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார் சுந்தர் பிச்சை

பத்ம பூஷன் விருதை பெற்றார் கூகுள் சிஇஓ!
ரஜினிகாந்த் : அம்ரித் ரத்னா விருது பெறும் சூப்பர் ஸ்டார்

”மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரை சுந்தரின் பயணம் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது. அவரது அபரிமித வளர்ச்சி, இந்தியா - அமெரிக்க இடையேயான பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளை வலுவாக்குகிறது. உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

விருதை பெற்ற சுந்தர் பிச்சை, “இந்தியா என்னில் ஒரு பகுதி. எங்கு சென்றாலும், இந்தியாவை என்னுடன் எடுத்து செல்வேன்” என்றார்.

“என்னை உருவாக்கிய நாடு, எனக்கு இந்த மகத்தான கவுரவத்தை அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருது என் வாழ்க்கைக்கு அர்த்தமளிப்பதாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பத்ம பூஷன் விருதை பெற்றார் கூகுள் சிஇஓ!
இளையராஜாவை சந்தித்தாரா சுந்தர் பிச்சை? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com