சுரபி கௌதம் : ஆங்கிலம் தெரியாமல் கேலி செய்யப்பட்ட பெண் IAS ஆன கதை

பல்கலைகழகத்தில் தங்கம் வென்ற சுரபி, GATE, ISRO, SAIL, MPPSC PCS, SSC CGL, Delhi Police மற்றும் FCI போன்ற போட்டித் தேர்வுகளில் வென்றிருக்கிறார். ஆனாலும் அவரது இலக்கு ஐஏஎஸ் ஆவது தான்.
Surabhi Gautam
Surabhi GautamTwitter
Published on

மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்று ஐஏஎஸ் அதிகாரியாவதற்கான UPSC தேர்வு. இதில் வெற்றி பெற்று அதிகாரியாக வேண்டும் என்பது பலரது கனவு.

ஆனால் அது அத்தனை சுலபமல்ல மொத்தமாகக் கொடுக்கப்படும் 9 முயற்சிகளிலும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புபவர்கள் பலர்.

இந்த கடுமையான போட்டியில் சிலர் மட்டுமே நேர்த்தியாகப் படித்து வெற்றி பெற்றுகின்றனர். மிக அதிசயமாக சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒருவர் தான் சுரபி கௌதம். ஒரு நேரத்தில் ஆங்கிலம் தெரியாததால் கேலி செய்யப்பட்ட இவர் ஐஏஎஸ் அதிகாரியானது எப்படி?

யார் இந்த சுரபி கௌதம்

சுரபி மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சிறு வயதிலிருந்தே புத்திசாலி பெண்ணாக வளர்ந்த சுரபி, 10, 12ம் வகுப்புகளில் 90 விழுக்காடுக்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்.

மேற்படிப்புக்காகத் தனது முதல் போட்டித் தேர்வை எதிர்கொண்ட சுரபி அதில் வெற்றி பெற்று எலக்ட்ரானிக் இஞ்சினீரிங் படிப்பில் சேர்ந்தார்.

அந்த கிராமத்திலிருந்து மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்ற முதல் பெண் சுரபி தான். அவர் போபாலில் தங்கி கல்லூரியைத் தொடர்ந்தார்.

Surabhi Gautam
ரஜனி பண்டிட் : 22 ஆண்டுகளில் 80000 வழக்குகளை தீர்த்த லேடி ஜேம்ஸ் பாண்ட் - Detective-ன் கதை

பல்கலைகழகத்தில் தங்கம் வென்ற சுரபி, GATE, ISRO, SAIL, MPPSC PCS, SSC CGL, Delhi Police மற்றும் FCI போன்ற போட்டித் தேர்வுகளில் வென்றிருக்கிறார். ஆனாலும் அவரது இலக்கு ஐஏஎஸ் ஆவது தான்.

இந்த தேர்வுகளில் சிலவற்றை BARC-யில் அணு விஞ்ஞானியாக இருந்த போது எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் தெரியாமல் கேலி செய்யப்பட்டார்

வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கடந்து வந்தாலும் எல்லாரையும் போல சுரபிக்கும் சில கருப்பு பக்கங்கள் உள்ளது. சுரபி, கல்லூரி வகுப்பறையில் அதிகமாகக் கேலி செய்யப்பட்டார்.

காரணம் அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது.தனக்கு ஆங்கிலம் வரவில்லை என்பதற்காக அவர் முடங்கிவிடவில்லை. அவரை கேலி செய்தவர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தார்.

ஆங்கிலம் கற்றுக்கொண்டால் இப்போது இருப்பதை விட நல்ல நிலையில் இருக்க முடியும் என்பதை உணர்ந்த சுரபி, தினசரி 10 புதிய வார்த்தைகள் எனக் கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்.

Surabhi Gautam
கனிகா : 32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் - ஊர் குருவி பருந்தான கதை

கேலி கிண்டல்களைக் கடந்து ஒரு சாதாரண குடும்பத்தில், சாதாரண கிராமத்தில் பிறந்த சுரபி இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார்.

அதற்காக அவர் கடினமாக உழைத்திருக்கிறார். Hard Work will Pay off என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சுரபி.

Surabhi Gautam
கணிதத்தில் 31 மார்க், மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் - வைரலாகும் IAS அதிகாரியின் மார்க் ஷீட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com