கோடை காலத்தில் மழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மாநிலங்கள்!

இந்தியாவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் உயர்ந்த வெப்பநிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் மழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மாநிலங்கள்!
கோடை காலத்தில் மழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மாநிலங்கள்!canva
Published on

அடுத்த ஐந்து நாட்களில் எந்தெந்த மாநிலங்களில் மழை மற்றும் வெப்ப அலை அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் உயர்ந்த வெப்பநிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னறிவிப்புகள், குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் வானிலை தொடர்பான சவால்களை சமாளிக்க தயாராக இருக்கவும், அதற்கேற்ப திட்டங்களை மாற்றியமைக்கவும் உதவியாக இருக்கும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் "அதிக வெப்பம்" ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னரே கணித்துள்ளது.

வழக்கமான நாட்களுடன் ஒப்பிடும்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20 வெப்ப அலை நாட்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், பெரும்பாலான சமவெளிப் பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் அதிகரித்துள்ளதாக முன்னறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் தேதி வரை கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களில் வெப்பமான இரவு நிலைகளையும் எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர கர்நாடகா, கங்கை மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

IMD இன் சமீபத்திய அறிக்கைப்படி, வடகிழக்கு இந்தியாவில் ஏப்ரல் 9 வரை லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மாநிலங்கள்!
கனடா: மழை நீருக்கு வரி விதிக்கும் நகரம் - அவதிப்படும் மக்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com