Independence Day 2023 : இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது தெரியுமா?
Independence Day 2023 : இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது தெரியுமா?Twitter

Independence Day 2023 : இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது தெரியுமா?

புலியும் சிங்கமும் ஒரே காட்டில் வாழ்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டுமே! பாலைவனத்தையும் பனி மலைகளையும் கொண்ட நாடு இந்தியா. இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பதனால் இந்தியாவில் பல விநோத விஷயங்கள் அரங்கேறுகின்றன.
Published on

இந்தியா ஒரு புதிரான நாடாக அறியப்படுகிறது. பலவிதமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இயற்கையின் பல ரகசியங்களை இந்தியாவில் தெரிந்துகொள்ளலாம்.

புலியும் சிங்கமும் ஒரே காட்டில் வாழ்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டுமே! பாலைவனத்தையும் பனி மலைகளையும் கொண்ட நாடு இந்தியா.

நூற்றுக்கணகான மொழிகள் இங்கு பேசப்படுகிறது. பல இன மக்கள் ஒன்றாக வசிக்கின்றனர். மதசார்பற்ற நாடாக வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நாடாக இந்தியா திகழ்கிறது.

நாம் நாட்டில் நீங்கள் தெரிந்துகொள்ளாத பல விஷயங்கள் இருக்கின்றன.

ஷாம்ப்பூ இந்தியாவிலிருந்து வந்தது

இன்று உலகம் முழுவதும் மக்கள் தலைக்கு ஷாம்ப்பூ பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது என்பது தெரியுமா?

கெமிக்கல்கள் நிறைந்த ஜெல் இல்லை. ஆனால் தலை முடியில் மூலிகைகலைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பழக்கம் நம் மக்களிடம் இருந்திருக்கிறது.

ஷாம்ப்பூ என்ற வார்த்தை சம்பு என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மஸாஜ் செய்வது என்று பொருளாம்.

கபடி

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தான் கபடி விளையாட்டுத் தொடங்கியது எனக் கூறப்படுகிறது. இதனாலோ என்னவோ, கபடி உலகில் இந்தியா முடிசூடா மன்னனாக விளங்குகிறது.

2004ல் முதல் கபடி உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. அப்போது முதல் அனைத்து கபடி உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

2020ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் கபடி சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று பல சாதனைகளைப் படைத்து வருகிறது. ஆனால் இதன் ஆரம்ப காலத்தில் நம் நாடு விண்வெளி ஆராய்ச்சிக்கு அதிக தொகை ஒதுக்க முடியவில்லை.

1963 அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சவுண்டிங் ராக்கெட் தான் இந்தியா ஏவிய முதல் ராக்கெட். திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பா என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் மிகவும் சிறியது என்பதால் ராக்கெட் ஏழு தளத்துக்கு மாட்டு வண்டியிலும் அதன் பிறகு சைக்கிளிலும் எடுத்துவரப்பட்டதாம்.

இந்த நிலையில் இருந்து நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் நாடாக கண்டறியும் அளவு விண்வெளி ஆரய்ச்சியில் முன்னேறியுள்ளது இந்தியா.

இரண்டாவது அதிகம் ஆங்கிலம் பேசும் நாடு

அமெரிக்காவுக்கு பிறகு அதிகமாக ஆங்கிலம் பேசும் இரண்டாவது நாடாக திகழ்கிறது இந்தியா.

விக்கிபீடியா சொல்லும் தகவலின் படி அமெரிக்காவில் அதிகபட்சமாக 31 கோடி ஆங்கிலம் பேசும் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 20 கோடி பேரால் ஆங்கிலம் பேச முடிகிறது.

இவர்களில் 80% இந்தியர்கள் தவறாகவே அல்லது தங்கள் மொழி கலந்தோ ஆங்கிலம் பேசுகின்றனர்.

சர்க்கரை

இந்தியர்கள் தான் முதன்முதலாக சர்க்கரையை பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு செய்யும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
நம்மிடம் இருந்தே சர்க்கரை சுத்தீகரிப்பை வெளிநாட்டினர் கற்றுக்கொண்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com