ஷ்யாம் சரண் நெகி : சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

இந்தியாவின் முதல் தேர்தலில் முதல் நபராக வாக்களித்தவர் தான் நெகி. அவர் வாக்களித்த தேதி அக்டோபர் 25 1951. அன்று முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வந்தார் நெகி.
ஷ்யாம் சரண் நெகி
ஷ்யாம் சரண் நெகிடிவிட்டர்
Published on

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷ்யாம் சரண் நெகி உடல் நலக் குறைவால் காலமானர். இவருக்கு வயது 106.

1917ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் கின்னாவூர் என்ற இடத்தில் பிறந்தவர் நெகி. இவர் கல்பா என்ற ஊரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பிறந்த போது இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதன் பிறகு 1951-52ல் முதன் முதலாக சுதந்திர இந்தியா தேர்தல்களை நடத்தியது. அந்த தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் ஷ்யாம் சரண் நெகி தான். 

இந்தியாவின் மற்ற இடங்களில் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது. ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடும் குளிரும், பனிப்பொழிவும் ஏற்படும் என்ற காரணத்தினால், 5 மாதங்களுக்கு முன்னதாக, அக்டோபர் மாதம்  தேர்தல் வாக்களிப்பு நடத்தப்பட்டது.

அதில் முதல் நபராக வாக்களித்தவர் தான் நெகி. அவர் வாக்களித்த தேதி அக்டோபர் 25 1951. அன்று முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வந்தார் நெகி.

ஷ்யாம் சரண் நெகி
Amou Haji: உலகின் அழுக்கான மனிதர் காலமானார்! பல வருடங்கள் குளிக்காமல் இருந்தது ஏன்?

உரிய மரியாதையுடன் ஷ்யாம் சரண் நெகிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாகவும் கின்னாவுர் மாவட்ட ஆட்சியர் பித் ஹுசைன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 2,2022 இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தல் இவர் வாக்களித்த தேர்தலாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com