இந்தியா: டைனோசர் முட்டைகளை குலதெய்வமாக வணங்கிவரும் குடும்பம் - எங்கு இருக்கின்றனர்?

இயற்கையில் வித்தியாசமாக இருப்பவற்றை அல்லது தங்களால் புரிந்துகொள்ள, வீழ்த்த முடியாதவற்றை மக்கள் வழிபடுவது வழக்கமானது. அப்படிதான் மத்தியபிரேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குலதெய்வமென வணங்கி வந்த பொருள் இயற்கையின் பெரும் அதிசயம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியா: டைனோசர் முட்டைகளை குலதெய்வமாக வணங்கிவரும் குடும்பம் - எங்கு இருக்கின்றனர்?
இந்தியா: டைனோசர் முட்டைகளை குலதெய்வமாக வணங்கிவரும் குடும்பம் - எங்கு இருக்கின்றனர்?Twitter
Published on

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவகையான நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர். பெரிய மதங்கள், தெய்வங்கள் என்றுமட்டுமில்லாமல் நம்மையும் நம் வம்சாவளியையும் காக்கும் என்ற நம்பிக்கையில் குலதெய்வ வழிபாட்டை கடைபிடிப்பவர்களும் உண்டு.

மத்தியகிழக்கில் நெருப்பை கடவுளாக வழிபடுபவர்கள் உண்டு. மேற்குதொடர்ச்சி மலை திரைப்படத்தில் குறிப்பிட்ட மரத்தடியில கல் போட்டு வணங்குபவர்களைப் பார்த்திருப்போம்.

ஒரு குறிப்பிட்ட பாறையை, புலியை வணங்கும் மக்கள் இருக்கின்றனர்.

இயற்கையில் வித்தியாசமாக இருப்பவற்றை அல்லது தங்களால் புரிந்துகொள்ள, வீழ்த்த முடியாதவற்றை மக்கள் வழிபடுவது வழக்கமானது. அப்படிதான் மத்தியபிரேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குலதெய்வமென வணங்கி வந்த பொருள் இயற்கையின் பெரும் அதிசயம் எனத் தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேசம் மாநிலம் தர் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டலோய் குடும்பம் உள்ளங்கை அளவு உள்ள கல்பந்துகளை பல தலைமுறையாக பாதுகாத்தும் வழிபட்டும் வருகின்றனர்.

அங்குள்ள பட்ல்யா (Padlya) கிராமத்தில் வசிக்கும் வேஸ்தா மண்டலோய் அவரது தந்தை வம்சாவழியில் இந்த கற்களை வணங்கி வருகிறார். இதனை காக்கர்-பைரவ் அல்லது நில தெய்வமாக கருதுகின்றனர்.

காக்கர்-பைரவை குலதெய்வமாக வணங்குகின்றனர். கால்நடைகளையும் விளைச்சளையும் பாதுகாக்கும் தெய்வமாக அவரைக் கருதுகின்றனர். மண்டலோய் குடும்பத்தைப் போன்றே தர் மாவட்டத்தில் இன்னும் சில குடும்பங்கள் இயற்கையான பொருட்களை வணங்கி வருகின்றனர்.

இந்த பொருளால் மக்களுக்கு பாதுகாப்பும் அருளும் வழங்க முடியுமா எனத் தெரியாது. ஆனால் அவை டைனோசர் முட்டைகள் என்று கண்டுபிடித்துள்ளனர் லக்னோவின் சஹ்னி இன்௶டிட்யூட் ஆஃப் பேலியோசயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள்.

டைனோசர்களில் டைட்டானோசர்கள் எனப்படும் உயிரினத்தின் படிமமாக்கப்பட்ட முட்டைகள் இவை என்பதைக் உறுதி செய்துள்ளானர். டைட்டானோசர்கள் முறையாக பெயரிடப்பட்ட முதல் இந்திய டைனோசர்களாகும். உலகில் வாழ்ந்த மிகப் பெரிய டைனோசர்களில் இதுவும் ஒன்று. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிர்வாழ்ந்ததாக அனுமானித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் 250 டைட்டானோசர் முட்டைகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com