இன்று காலை சுமார் 11 மணி அளவில் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அது குறித்து சில சுவாரசிய தகவல்களை இங்கே பார்த்து விடுவோம்.
பொதுவாக ஜூலை 2019 க்கு முன் ஒரு நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாரோ அல்லது அடுத்த ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறாரோ, பட்ஜெட் ஆவணங்கள் மற்றும் தரவுகள் நிறைந்த ரகசிய காகிதங்களை தோலில் செய்யப்பட்ட ஒரு தரமான ப்ரீஃப்கேசில் தான் கொண்டு வருவார்.
ஆனால் கடந்த ஜூலை 2019 க்கு பிறகு இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வழக்கத்தை மாற்றி வட இந்தியாவில் பெரிய அளவில் வணிகர்கள் பின்பற்றும் பாகி கத்தாவில் பட்ஜெட் ஆவனங்களைக் கொண்டு வந்தார்.
காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு குறியீடாக அப்போது இது கூறப்பட்டது. இன்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு நிற பாகி கத்தா பையில் பட்ஜெட் விவரங்கள் அடங்கிய டேப்லெட் உடன் இந்திய நாடாளுமன்றத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அப்படி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுகள் பெரும்பாலும் 90 முதல் 120 நிமிடங்களுக்குள் நிறைவடைந்து விடும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை கிட்டத்தட்ட 162 நிமிடங்களுக்கு நீடித்தது. இதுவே இந்திய வரலாற்றில் நிதியமைச்சர் ஒருவர் தாக்கல் செய்து நீண்ட நேர பட்ஜெட் உரை என கணக்கில் டெக்கன் ஹெரால்ட் பட்டியலிட்டிருக்கிறது.
இதற்கு முன்பும் 137 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய சாதனையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடமே இருக்கிறது.
அதிக சொற்களைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களையே சேரும்.
1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டில் சுமார் 18,650 சொற்களைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 - 22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காகிதம் இன்றி டிஜிட்டல் முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் வாசித்து பேப்பர் லெஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் இந்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை பெற்றார்.
இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டுக்கும் காகிதங்களில் பிரிண்ட் செய்யப்படவில்லை. டிஜிட்டல் முறையிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் பல்வேறு வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
என்னதான் உலகில் அனைவரும் சமம் என பேசிக்கொண்டு இருந்தாலும், இன்றுவரை இந்திய அரசியலில் கணிசமான எண்ணிக்கையில் ஆண் தலைவர்களே கொலொச்சி இருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை இரண்டு பெண்கள் மட்டுமே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி.
அவரை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.
இதுவரை இவர் 4 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தால் இது அவருடைய ஐந்தாவது பட்ஜெட் ஆகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust