பூமியில் இருந்து 1 லட்சம் அடி உயரத்தில் பறந்த மூவர்ணகொடி - விண்வெளி வீரர்கள் பெருமிதம்

இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறிய சமந்தா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் பல அறிவியல், விண்வெளி சார்ந்த பயணங்களில் பணியாற்றி வருவதிலும் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
National Flag hurled above Earth
National Flag hurled above EarthTwitter
Published on

இந்தியாவில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். சுதந்திர தின அமுத பெருவிழா (அசாதி கா அம்ரித் மஹோத்சவ்) என பெயரிடப்பட்டு, தேசிய கொடிக்கு மரியாதைகள் செலுத்திவரும் வேளையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பூமிக்கு 30 கிமீ உயரத்தில் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றியது. இந்த கொடி கிரகத்திலிருந்து 1,06,000 அடி உயரத்திற்கு ஒரு பலூனில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி ஒரு வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

இந்த 76வது சுதந்திர தினத்தில் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறிய சமந்தா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் பல அறிவியல், விண்வெளி சார்ந்த பயணங்களில் பணியாற்றி வருவதிலும் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கும் வாழ்த்து கூறிய சமந்தா, சர்வதேச விண்வெளி நிறுவனம் இஸ்ரோவுடனான தனது கூட்டாண்மையை விரிவுபடுத்தி வருவதாக அவர் கூறினார்.

இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான ராஜா சாரியும் இஸ்ரோவுடன் நாசா இணைந்து பணியாற்றிய தினங்களை நினைவு கூறி, 76வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

National Flag hurled above Earth
75வது சுதந்திர தினம் : மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் கங்குலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com