இந்திய அரசு 2023 - 24 நிதியாண்டில் 15.4 லட்சம் கோடி ரூபாயை கடனாகத் திரட்ட இருப்பதாகவும், அதில் பெரும்பகுதி பணத்தை Dated Securities என்று அழைக்கப்படும் அரசு கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட இருப்பதாகவும் பல்வேறு வணிக நாளிதழ் வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது 2022 - 23 நிதியாண்டில் திரட்ட இருக்கும் 14.21 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்த நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாயை அரசு கடன் பத்திரங்கள் வழியாகவும், மீதமுள்ள பணத்தை சிறுசேமிப்புகள் உட்பட மற்ற சில ஆதாரங்கள் வழியாகவும் திரட்ட இருப்பதாக நிதி அமைச்சரே பட்ஜெட் அறிவிப்புகளின் போது கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் அதாவது 2022 - 23 நிதி ஆண்டில் அரசு நிர்ணயத்திற்கும் 14.21 லட்சம் கோடி ரூபாயில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி நிலவரப்படி அரசு 12.93 லட்சம் கோடி ரூபாயை திரட்டிவிட்டது.
இது குறிப்பிட்ட 14.21 லட்சம் கோடி ரூபாயில் 91 சதவீதம். இப்படி ஒரு சூழலிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் இந்த நிதி பற்றாக்குறை 6.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இதுவே அடுத்த 2023 - 24 நிதியாண்டில், நிதி பற்றாக்குறை இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 5.9 சதவீதமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.
2021 - 22 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையைத் தொடர்ந்து குறைப்போம், 2025 - 26 காலகட்டத்தில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைப்போம் என நிதியமைச்சர் கூறியிருந்தார்.
இப்போதும் அப்பாதையில் பயணிப்பதாகவும் தொடர்ந்து இந்தியாவின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இருப்பதாகவும் நிதி அமைச்சர் இன்றைய பட்ஜெட் உரையில் கூறினார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust