சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்கி பயணம் செய்யும் கேரள குடும்பம் - ஓர் ஆச்சர்ய தகவல்

இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக சுமார் 18 மாதங்களில் 1500 மணிநேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் தமராக்‌ஷன். மேலும், இதற்காக மொத்தம் 14 மில்லியன் ரூபாயை இவர் செலவழித்திருக்கிறார்.
Ashok Aliseril Thamarakshan
Ashok Aliseril ThamarakshanTwitter
Published on

நாம் எல்லோருமே, ஒரு தூரப் பயணத்திற்கான பல முன் தயாரிப்புகளைச் செய்து வைத்துக் கொள்வோம் இல்லையா?. ஆனால், எப்போதாவது ஒரு பயணத்திற்காக, சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்குவது பற்றி யோசித்திருப்போமா? ஒருவர் யோசித்திருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த அசோக் அலிசெரில் தாமராக்‌ஷன் என்பவர், தனது குடும்பத்தோடு விடுமுறைக்காக ஊர் சுற்றுவதற்கு நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தை உருவாக்கியுள்ளார். தற்போது லண்டனில் வசிக்கும் அசோக் அலிசெரில் தாமராக்‌ஷன், கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சுமார் 18 மாதங்கள் கடுமையான முயற்சி செய்து, தன்னுடைய சொந்த விமானத்தை உருவாக்கியுள்ளார்.

Ashok Aliseril Thamarakshan
Ashok Aliseril ThamarakshanTwitter

தற்போது, தாமராக்‌ஷனும் அவரது மனைவியும் தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் தங்கள் இரண்டு மகள்களுடன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவைச் சுற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஒற்றை எஞ்சின் ஸ்லிங் TSi விமானத்தில் இதுவரை பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர். இதற்கு தமரக்‌ஷன் தனது இளைய மகள் தியாவின் நினைவாக "ஜி-தியா" என்று பெயரிட்டுள்ளார்.

கேரள சட்டமன்ற உறுப்பினர் ஏ வி தாமராக்‌ஷனின் மகனாகிய அசோக் அலிசெரில் தாமராக்ஷன், பாலக்காடு பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து முதுகலை படிப்பதற்காகக் கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.

Ashok Aliseril Thamarakshan
வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?
Flight
FlightTwitter

கோவிட் -19 காரணமாக உலகம் மொத்தமும் அடங்கியிருந்த போது, ஒரு விமானம் விபத்துக்குள்ளான செய்தி தான் தமராக்‌ஷனை ஒரு சொந்த விமானம் செய்யத் தூண்டியிருக்கிறது. இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக சுமார் 18 மாதங்களில் 1500 மணிநேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் தமராக்‌ஷன். மேலும், இதற்காக மொத்தம் 14 மில்லியன் ரூபாயை இவர் செலவழித்திருக்கிறார்.

இந்த விமானத்தை தயாரித்த அனுபவம் குறித்து தமராக்‌ஷன் கூறுகையில், "புதிய கேஜெட்டைப் பெறுவதை விட இது மிகவும் உற்சாகமானது. முதல் லாக் டவுனின் போது நாங்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினோம். ஏனென்றால் எங்களுக்கு எப்போதுமே சொந்தமாக விமானம் வாங்குவதற்கான விருப்பம் இருந்தது.

Ashok Aliseril Thamarakshan
கனடா விமானம் : 41000 அடி உயரத்தில் எரிபொருள் தீர்ந்த Plane | Video

ஆரம்பத்தில் எங்களுக்குப் பணம் தான் தேவையாக இருந்தது. எனவே அதை சேகரிக்க தொடங்கினோம். பிறகு 2018-ஆம் ஆண்டு பைலட் உரிமம் பெற்ற பிறகு, முதன்முதலாக இரண்டு பேர் செல்லக்கூடிய சிறிய விமானம் ஒன்றை வாங்கினோம்.

பிறகு குடும்பம் பெரிதான பிறகு நான்கு பேருக்கான விமானம் வாங்கலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. எனவே, புதியதாக ஒன்றை நாங்களே உருவாக்கும் முடிவுக்கு வந்தோம்” என்று கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com