ஒரு ரயில் டிக்கெட் வைத்து வெவ்வேறு ரயில்களில் பயணிக்கலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

இந்தியன் ரயில்வேஸ் பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுக்கிறது. அதன்படி ஒரே டிக்கெட் வைத்து வெவ்வேறு ரயில்களை ஏறி பயணிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Indian Railways :  Can You Travel On Another One With The Same Ticket?
Indian Railways : Can You Travel On Another One With The Same Ticket?Twitter

ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த, மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும்.

இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுக்கிறது. பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே போன்று ஒரே டிக்கெட் வைத்து வெவ்வேறு ரயில்களை ஏறி பயணிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய ரயிலில் அப்படி நாம் பயணிக்க சில நிபந்தனைகளுடன் ஒரு டிக்கெட் வழங்கப்படுகிறது.

அதற்கு சுற்றுப் பயண டிக்கெட்டை (circular ticket) என்று பெயர். தொடக்கமும் முடிவும் ஒரே இடமாக இருக்கும் இந்த சர்குலர் ஜர்னி டிக்கெட் பல்வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது. ஆனால் ஒவ்வொன்றிருக்கும் தனித்தனி டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த டிக்கெட்டுகளுக்கான பாதை, கட்டணம் போன்ற விவரங்களை ஒவ்வொரு மண்டல ரயில்வேயிலும் பரிந்துரைக்கப்பட்ட நிலையங்களில் இருந்து பெறலாம். அவை வழக்கமான கட்டணத்தை விட குறைவாக இருக்கும்.

ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் கிடைக்கும் இந்த டிக்கெட் அதிகபட்சம் 8 இடைவேளை பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதிலும் மண்டல ரயில்வேயால் வழங்கப்படும் ஸ்டாண்டர்ட் சர்குலர் ஜர்னி டிக்கெட்டுகள் சில குறிப்பிட்ட வழிதடங்களில் சுற்றுலா பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கிறது.

Indian Railways :  Can You Travel On Another One With The Same Ticket?
Indian Railways: 13 மணிநேர வேலை; கழிவறை கூட பிரச்னை - ரயில் ஓட்டுநர்களின் கஷ்டங்கள் என்ன?

தொடக்க மற்றும் முடிவு நிலையங்கள் ஒரே இடமாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டும் என்றால் ஹவுராவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சர்குலர் டிக்கெட் எடுக்கிறீர்கள் என்றால் உங்கள் பயணம் ஹவுராவில் தொடங்கி ஹவுராவில் முடிவடையும்.

ஹவுராவில் இருந்து பெங்களூர் நகரம்- மைசூர் - ஜோலார்பேட்டை - ஈரோடு - திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம்- மதுரை - கொடைக்கானல் சாலை - திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் வழியாக சென்னை சென்ட்ரலை அடைந்து மீண்டும் இதே வழியில் ஹவுராவிற்கு திரும்ப அனுமதிக்கும்.

Indian Railways :  Can You Travel On Another One With The Same Ticket?
இந்திய ரயில் நிலையங்களுக்கு சாலை என்று பெயர் வைக்க இதான் காரணமா? அடடே தகவல்

இடையில் நின்று பயணிக்கும் போது நாம் தனித்தனியாக புக்கிங் செய்யும் மொத்த விலையை விட பயண டிக்கெட் மலிவானது.இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி, வெவ்வேறு நிலையங்களில் நின்று அதன் இடங்களையும் சுற்றி பார்த்து அடுத்து வரும் ரயில்களில் அடுத்த இடத்திற்கு சென்று விடலாம்.

நீண்ட தூர ரயில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இந்த சலுகை பெருதவியாக இருக்கும்.

குறைந்தபட்சம் 1000 கிமீ தூரம் பயணிக்கும் போது, பயண டிக்கெட்டுகளின் விலையில் ஆண் மூத்த குடிமக்களுக்கு 40% சலுகையும், மூத்த குடிமக்களுக்கு 50% சலுகையும் வழங்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com