Indian Railways: 73 ஆண்டுகளாக இலவச ரயில் சேவை; தினசரி 800 பயணிகள் - எங்கே?

73 ஆண்டுகளாக குறிப்பிட்ட ரயில் ஒன்று அதன் பயணிகளுக்கு தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. எங்கே என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
 Take a free train on the Bhakra-Nangal route For The Past 73 Years (Rep)
Take a free train on the Bhakra-Nangal route For The Past 73 Years (Rep)Twitter

ரயில் பயணம் பலருக்கு பிடித்தமான போக்குவரத்து. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் போக்குவரத்து ஒரு சிறந்த மற்றும் மிகவும் சிக்கனமான வழிகளில் ஒன்றாகும்.

கடந்த 73 ஆண்டுகளாக குறிப்பிட்ட ரயில் ஒன்று அதன் பயணிகளுக்கு தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த ரயில் பக்ரா பயஸ் மேலாண்மை வாரியத்தால் இயக்கப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள பக்ரா- நங்கல் இடையே ஒரு குறிப்பிட்ட பாதையில் இயக்கப்படுகிறது.

இலவச ரயில் பயணம்

உலகின் மிக உயரமான நேரான ஈர்ப்பு அணையாக அறியப்படும் பிரபலமான சுற்றுலாத்தலமான பக்ரா-நங்கல் அணை இந்த பாதையில் அமைந்துள்ளது.

அணையைக் காண தொலைதூரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

மேலும் அவர்கள் அங்கு செல்ல இலவச ரயில் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரயில் ஷிவாலிக் மலைகள் மற்றும் சட்லஜ் நதி வழியாக 13 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த ரயில் மரப் பெட்டிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

 Take a free train on the Bhakra-Nangal route For The Past 73 Years (Rep)
உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் : 100 பெட்டிகள்; 1.9 கி.மீ நீளம் - எங்கே?

800 பேர் பயணம்

ஆரம்பத்தில், 10 பெட்டிகளைக் கொண்டிருந்த இந்த ரயிலில் இப்போது 3 பெட்டிகள் மட்டுமே உள்ளன. முன்பு நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட இந்த ரயில் இப்போது டீசலில் இயங்குகிறது.

இது பல நிலையங்கள் மற்றும் அதன் பாதையில் மூன்று சுரங்கங்கள் வழியாக செல்கிறது. பள்ளி மாணவர்கள் உட்பட ஒவ்வொரு நாளும் சுமார் 800 பேர் இதனை பயன்படுத்துகின்றனர்.

பக்ரா-நங்கல் இரயில் பாதை

பக்ரா-நங்கல் இரயில் பாதை 1948 இல் முடிக்கப்பட்டது. இது பக்ரா-நங்கல் அணையைக் கட்டும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு செல்ல ரயில் பயன்படுத்தப்பட்டது.

அணை அதிகாரப்பூர்வமாக 1963 இல் திறக்கப்பட்டது, அதன் பிறகு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் வருகையின் ஒரு பகுதியாக இலவச ரயில் பயணத்தை அனுபவிக்க முடிந்தது.

இதற்கிடையில் 2011 ஆம் ஆண்டு நிதி இழப்புகள் காரணமாக இலவச சேவையை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இன்றும் இலவசமாக ரயில் சேவையை வழங்கி வருகின்றனர்.

இந்த ரயில் நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு 8:20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. அதே நாளில், மீண்டும் நங்கலில் இருந்து பிற்பகல் 3:05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ராவை வந்தடைகிறது.

 Take a free train on the Bhakra-Nangal route For The Past 73 Years (Rep)
பெங்களூரு டு உடுப்பி : இந்தியாவின் வசீகரமான ரயில் பாதை இதுதான் - a wow story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com