Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்

இந்திய ரயில்வே வகுத்துள்ள சில முக்கியமான விதிகளைப் பற்றி ஒவ்வொரு பயணிகளும் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன விதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்
Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்Twitter
Published on

177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே வகுத்துள்ள சில முக்கியமான விதிகளைப் பற்றி ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன விதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓடும் ரயிலில் அலாரம் சங்கிலியை இழுப்பது

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு பெட்டியின் கதவுகளிலும் அவசர எச்சரிக்கை சங்கிலிகள் வைக்கப்பட்டுள்ளதை பார்த்திருக்க முடியும். நம்மில் பலருக்கு எப்போதாவது சங்கிலியை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் காரணமின்றி சங்கிலியை இழுத்தால் அபராதம் கட்டவேண்டிருக்கும்.

மருத்துவ அவசரநிலை, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், விபத்து அல்லது அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே அலாரம் சங்கிலியை இழுக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே விதிகள் கூறுகின்றன.

பயணத்தின் போது உங்கள் பயணத்தை நீட்டிக்கலாம்

சீசன்களில் சில பயணிக்களுக்கு பயணச்சீட்டுகள் கிடைக்காமல் போகும். இதற்காக இந்திய இரயில்வே ஒரு விதியைக் கொண்டுள்ளது.

பயணிகள் அவர்களின் சரியான இலக்குக்கு முன்பே ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். பின்னர், பயணம் செய்யும் போது, அவர்கள் டிடிஆரிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணத்தை நீட்டிக்கலாம். அவ்வாறு பயணம் செய்யும் போது பயணி வேறு இருக்கையில் அமர வைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் பெர்த் விதி

இந்திய இரயில்வே ரயிலின் நடு பெர்த் தொடர்பாக மிக முக்கியமான விதி உள்ளது. பயணிகள் பகலில் நடு பெர்த்தை மடிக்க முடியாது என்று விதி உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, பயணிகள் நடு பெர்த்தில் தூங்க முடியும்.

நீங்கள் ரயிலைத் தவறவிட்டால்...

சில சமயங்களில் பயணிகள் ரயிலை தவறவிடலாம். பயணிகளுக்கு அந்த வாய்ப்பை மீண்டும் வழங்குவதற்காக, இரு நிறுத்தங்கள் விதிப்படி, டிக்கெட் பரிசோதகர் அந்த இருக்கையை மற்றொரு பயணிக்கு மாற்ற முடியாது. குறைந்த பட்சம் 1 மணிநேரம் அல்லது இரண்டு நிறுத்தங்களை ரயில் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பது ரூல்ஸ்.

இரவு 10 மணிக்கு மேல் பயணிகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது

பொதுவாக ரயில் பயணங்கள் நீண்டதாக இருக்கும் என்பதனால் பயணத்தின் போது பயணிகளை தொந்தரவு செய்யக் கூடாது; இரவு 10 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது விதி. அதனால்தான் TTR கூட குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டிக்கெட்டுகளை சரிபார்க்க வேண்டும்.

பயணிகள் சரியாக ஓய்வெடுக்க, இரவு விளக்குகளைத் தவிர, பெட்டியில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும். இதனால்தான் ரயில்களில் வழங்கப்படும் உணவைக் கூட இரவு 10 மணிக்கு மேல் வழங்க முடியாது.

Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்
Indian Railways: ரயில் பாதைகளில் இருக்கும் இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

ரயிலில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை

நீங்கள் பேருந்துகள் அல்லது விமானங்களில் பயணம் செய்தால், பொருட்களின் விலைகள் அவற்றின் உண்மையான MRPS ஐ விட அதிகமாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இந்தியன் ரயில்வே இதனை கட்டுபடுத்த ஒரு விதியை வைத்துள்ளது.

ரயில்களில் சிற்றுண்டிகள், உணவுகள் மற்றும் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பாக விதிகள் இருக்கின்றன. இது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதையும், தயாரிப்புகள் தரத்தை உறுதி செய்யவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

ஒரு வேளை விற்பனையாளர் அத்தகைய விதியை மீறினால் அவர் மீது புகார் அளிக்கலாம், அதற்காக சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவரது உரிமம் ரத்து செய்யப்படலாம்.

ரயிலில் அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்கவும்

ரயிலில் அதிக சத்தம் எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும். பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தம் எழுப்பக்கூடாது. உங்கள் ஃபோன் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் வீடியோ அல்லது இசையை பார்க்கிறீர்கள் என்றால், ஒலியளவைக் குறைவாக வைத்திருக்கவும்.

மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக இந்திய ரயில்வேக்கு பல புகார்கள் வந்தபோது இந்த விதி வகுக்கப்பட்டது.

Indian Railways: ரயிலில் பயணிக்கும் முன் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விதிகள்
Indian Railways : ஏசி பெட்டிகள் ரயிலின் நடுபகுதியில் இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com