ஃபோர்ப்ஸ் 2022 : இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் தெரியுமா.?

இந்த பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 25 பில்லியன் டாலர் அதிகரித்து, 800 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த ஆண்டிற்கான 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 Adani - Ambani
Adani - Ambani twitter

ஃபோர்ப்ஸ் 2022 அறிக்கையில் இந்தியாவின் சிறந்த 100 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகப் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும், இந்திய பணக்காரர்களின் வளர்ச்சி இந்த ஆண்டும் மேல் நோக்கியே உள்ளது.

இந்த பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 25 பில்லியன் டாலர் அதிகரித்து, 800 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.இந்த ஆண்டிற்கான 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் தனது சொத்து மதிப்பை ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்த்திய, அதானி இந்த ஆண்டு சுமார் 150 பில்லியன் டாலர் சொத்து கொண்டு நாட்டின் முதல் பணக்காரர் என்று மகுடம் சூடியுள்ளார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள்

அதானி
அதானிTwitter

கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 150 பில்லியன் டாலர் (ரூ. 1,211,460.11 கோடி) சொத்து மதிப்புடன் இந்திய பணக்கார பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக வலம் வரும் அதானி உலக அளவில் மூன்றாவது பில்லியனர் என்ற அந்தஸ்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானிTwitter

முகேஷ் அம்பானி

பட்டியலில் அதானிக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நிகர மதிப்பு $88 பில்லியன் (ரூ.710,723.26 கோடி) கொண்டு கடந்த ஆண்டை விட 5 சதவீதம் குறைந்துள்ளது.

அதானி மற்றும் அம்பானி இப்போது இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்துக்களில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.

ராதாகிஷன் தமானி

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சப்ளை செயின் நிறுவனமான டிமார்ட் நிறுவனத்தின் தலைவரான ராதகிஷன் தமானி, பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

இவரின் நிகர சொத்து மதிப்பு 27.6 பில்லியன் டாலர் (ரூ. 222,908.66 கோடி) ஆகும்.

அவரது நிகர மதிப்பு 6 சதவீதம் குறைந்தாலும் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

சைரஸ் பூனாவாலா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 21.5 பில்லியன் டாலர் (ரூ.173,642.62 கோடி)

ஷிவ் நாடார்

ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு, 172,834.97 கோடி ரூபாயாகும்.

இந்த ஆண்டு 662 மில்லியன் டாலர் தொகையினை கல்விக்காக நன்கொடையாக ஷிவ் நாடார் வழங்கியுள்ளார்.

Savitri Jindal
Savitri JindalTwitter

சாவித்ரி ஜிண்டால்

ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே பெண் பில்லியனர் ஆவார். அவரது நிகர மதிப்பு $16.4 பில்லியன் (ரூ.132,452.97 கோடி)

திலீப் சாங்வி

சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனரான திலீப் சாங்வியின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் (125,184.21 கோடி) ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர் ஆவார்.

ஹிந்துஜா பிரதர்ஸ்

ஹிந்துஜா குழுமத்தின் சகோதரர்களான கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீ சந்த் ஹிந்துஜா, அசோக் ஹிந்துஜா உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு 122,762.29 கோடி ரூபாயாகும்.

குமார் பிர்லா

டெக்ஸ்டைல்ஸ் டு சிமென்ட், கூட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லா குழும தலைவரின் நிகர மதிப்பு $15 பில்லியன் (ரூ.121,146.01 கோடி)

1995 இல் அவரது தந்தை ஆதித்யா பிர்லா இறந்தபோது பிர்லா தனது 28 வயதில் இந்த குழுமத்தின் பொறுப்பை பெற்றார்.

 Adani - Ambani
வணிக ரீதியான ரகசியங்களை அரசிடம் பகிர்ந்து கொண்ட நிறுவனங்கள் - என்ன காரணம்?

பஜாஜ் குடும்பம்

பஜாஜ் குழுமம் சுமார் 40 நிறுவனங்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது

96 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த வணிக குழுமம், மும்பையில் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர்களின் சொத்து மதிப்பு $14.6 பில்லியன் ( 117,915.45 கோடி ) ஆகும்.

 Adani - Ambani
உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com