400 பில்லியன் டாலர் இலக்கு; `சொன்ன தேதிக்கு முன்பே சொல்லியடித்த இந்தியா' - பின்னணி இதுதான்

"அரசாங்கம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்த வளர்ச்சியை உறுதி செய்தது மட்டுமின்றி, மாதந்தோறும் நிலையான வளர்ச்சியையும் பெற்றன. 2022 நிதியாண்டிற்கான 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கு அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமையுடன் நகர்வதற்கு பிரதமர் துறைக்கு வழங்கிய முன்னுரிமை உறுதி செய்தது"
Narendra Modi

Narendra Modi

NewsSense 

Published on

இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு தனது ஏற்றுமதி இலக்கை அடைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என பலரும் ட்விட்டரில் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி:

கடந்த புதன்கிழமை அன்று, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், இலக்கை விட ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே 400 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியா 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்து, இந்த இலக்கை முதன்முறையாக எட்டியுள்ளது. இந்த வெற்றிக்காக நம் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் (MSME), உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஆத்மநிர்பார் பாரத் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். #LocalGoesGlobal"," என ட்வீட் செய்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா:

2020-21 நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 298.1 பில்லியன் டாலராக இருந்தது. மார்ச் 31, 2022 -ல் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் பொருட்கள் ஏற்றுமதி செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்தருந்தது. பிரதமர் மோடி ஜி தலைமையில் புதிய இந்தியா வரலாற்றை எழுதுவதற்கு தயாராகிவிட்டது. இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டியிருப்பது மிகவும் பெருமிதம் கொள்ளதக்க ஒன்று. பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் பாரத் தீர்மானத்தின் காரணமாக கோவிட்-க்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஊக்கத்தை இது பிரதிபலிக்கிறது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

<div class="paragraphs"><p>Narendra Modi</p></div>
Tamil News Today: இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்

NewsSense

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்:

இந்த சாதனை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "நாங்கள் 400 பில்லியன் டாலர் பொருட்கள் ஏற்றுமதி என்னும் மகத்தான இலக்கை அடைந்துள்ளோம் மலையைப் போன்ற இந்த இலக்கை நாம் எட்டியிருக்கிறோம். இந்த மகத்தான சாதனைக்கு வழிவகுத்த ஒவ்வொரு மணி நேரமும், நாள் மற்றும் மாதமும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். பிரதமர் தனது ட்வீட்டில், உத்தேசித்துள்ள காலக்கெடுவை விட ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான விளக்கப்படங்களையும் வெளியிட்டார். பிரதமர் பகிர்ந்துள்ள தகவலின்படி, சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 46 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு நாளுக்கான சராசரி 1 பில்லியன் டாலர், ஒரு மாதத்திற்கான சராசரி 33 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>Narendra Modi</p></div>
செளதி அரேபியா அரசு : அராம்கோ எண்ணெய் நிறுவன லாபம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது!

NewsSense

EEPC -ன் தலைவர் மகேஷ் தேசாய்:

"அரசாங்கம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்த வளர்ச்சியை உறுதி செய்தது மட்டுமின்றி, மாதந்தோறும் நிலையான வளர்ச்சியையும் பெற்றன. 2022 நிதியாண்டிற்கான 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கு அனைத்து பங்குதாரர்களும் ஒற்றுமையுடன் நகர்வதற்கு பிரதமர் துறைக்கு வழங்கிய முன்னுரிமை உறுதி செய்தது என EEPC (Engineering Export Promotion Council of India) இந்தியா தலைவர் மகேஷ் தேசாய் இந்த ஏற்றுமதி இலக்கு குறித்து பதிலளித்தார். மேலும் அவர், "இன்னும் சில நாட்களில் புதிய நிதியாண்டில் நாம் நுழையும்போது, ​​பல சவால்கள், குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் மோதலில் இருந்து எழும் அரசியல் பதட்டங்கள் இருந்தாலும், பொறியியல் பொருட்கள் துறை அதிக இலக்கை அடையும்," என்கிறார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com