பாகிஸ்தானைவிட இந்தியா சிறப்பு : பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இருப்பினும் இந்தியாவின் பாஜக ஆட்சியை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வந்தாலும் இந்தியாவை இம்ரான்கான் புகழ்வது இது முதல்முறையல்ல.
ndia's foreign policy better than Pakistan, says Imran Khan

ndia's foreign policy better than Pakistan, says Imran Khan

NewsSense

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில் இம்ரான் கான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக வாக்களிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் பேரணி ஒன்றில் பேசிய இம்ரான் கான், ”நான் இந்தியாவிற்கு தற்போது சல்யூட் வழங்குகிறேன்” என்றார்.

சரி இதற்கு இந்த பாராட்டு என்று பார்ப்போம். இந்தியா எப்போது ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவதற்கான பாராட்டுதான் இது என்றார்.

“இந்தியா அமெரிக்காவுடன் குவாட் கூட்டணியில் இருந்தாலும் தன்னை நடுநிலை நாடு என்று தெரிவித்து கொள்கிறது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்திருப்பதால், பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகிறது இருப்பினும் இந்தியா தற்போதும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானதாக இருப்பதால்தான் இது சாத்தியமாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்தியாவின் பாஜக ஆட்சியை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வந்தாலும் இந்தியாவை இம்ரான்கான் புகழ்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக ஜனவரி மாதம் இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் ஐடி துறை வேகமாக வளர்வது குறித்தும், முதலீடுகளை ஈர்க்கும் கொள்கைகள் குறித்தும் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com