இந்தியாவின் மிக சிறிய, பெரிய தேசிய பூங்காக்கள் எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்

காசிரங்கா தேசிய பூங்கா முதல் பந்திபூர், முதுமலை புலிகள் காப்பகம் நமக்கு மிகப் பிரபலமாக அறியப்பட்ட இடங்கள். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசியப் பூங்காக்கள் பற்றி தெரியுமா? இவை எங்கே இருக்கின்றன?
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசிய பூங்கா- எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசிய பூங்கா- எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்ட்விட்டர்
Published on

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை விலங்கினங்களை பாதுகாக்கவும், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகும்.

காசிரங்கா தேசிய பூங்கா முதல் பந்திபூர், முதுமலை புலிகள் காப்பகம் நமக்கு மிகப் பிரபலமாக அறியப்பட்ட இடங்கள். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசியப் பூங்காக்கள் பற்றி தெரியுமா?

இவை எங்கே இருக்கின்றன?

ஹெமிஸ் தேசிய பூங்கா

லடாக்கில் அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்கா தான் இந்தியாவின் மிகப் பெரிய தேசிய பூங்காவாகும். 1981ல் இத்தேசிய பூங்கா சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. பின்னர் விரிவாக்கப்பட்டு, தற்போது 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இதுவே தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய தேசிய பூங்காவாகும்

என்னென்ன வகையான விலங்குகளை காணலாம்?

பனிச் சிறுத்தைகளின் மிக முக்கிய வாழ்விடமாக இருக்கிறது இந்த ஹெமிஸ் தேசிய பூங்கா. இங்கு தற்போது சுமார் 200 பனிச் சிறுத்தைகள் வாழ்கின்றன. தவிர இங்கு திபெத்திய ஓநாய்கள், யூரேசிய பிரவுன் கரடிகள், சிவப்பு நரிகள், ஹிமாலயன் மர்மோட், அர்காலி எனப்படும் திபெத்திய செம்மறி ஆடுகள் உள்ளிட்ட சில அரிய வகை மிருகங்களை இங்கு காணலாம்.

நீங்கள் பறவைக் காதலராக இருந்தால், கோல்டன் ஈகிள் ( தங்க நிற கழுகுகள்), ஹிமாலயன் ஸ்னோகாக்,  லாம்மர்ஜியர் கழுகு, ஹிமாலயன் கிரிஃபோன் போன்ற அரிதான பட்சிகள் உங்களை கவரும்.

இந்தியாவின் வேறு எந்த தேசிய பூங்காக்களிலும் அல்லாமல், இங்கு வனவிலங்குகளுடன் மனிதர்களும் வசிக்கின்றனர். ஆயர் சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு துறை சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இது மனிதர்கள் விலங்குகள் இருவரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து போடப்பட்ட விதிகளாகும்.

அங்கு தங்கியிருப்பவர்கள் மட்டுமல்ல, சுற்றுலா பயணிகளுக்குமே சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர அங்கு ஹெமிஸ் மடாலயம் ஒன்றும் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஹெமிஸ் திருவிழா நடைபெறும்

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசிய பூங்கா- எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

சவுத் பட்டன் ஐலேண்ட் தேசிய பூங்கா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவின் மொத்த பரப்பளவு வெறும் 5 சதுர கிலோமீட்டர் தான்.

இதனால் இதுவே இந்தியாவின் மிகச் சிறிய தேசிய பூங்காவாக அறியப்படுகிறது.

ஜான்சி ராணி கடல் தேசிய பூங்காவின் ஒரு அங்கமான இது அந்தமானின் ஹவ்லாக் தீவுகளில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது

என்னென்ன வகையான விலங்குகளை காணலாம்?

இங்கு செழிப்பான பவளப்பாறைகளை காணலாம். இங்கிருக்கும் தண்ணீர் கண்ணாடி போன்ற சுத்தமாக இருப்பதால், ஆழத்தில் இருக்கும் இவற்றை நேரடியாக தரையிலிருந்தே காணலாம்.

ஸ்னாப்பர், பராக்குடா, கடல்சிங்கம், ஆமைகளையும் இங்கு அதிகம் காணலாம்.

வெள்ளை நிற வயிற்றைக் கொண்ட கடல் கழுகுகள், ரே வகை மீன்களும் இங்கு வசிக்கின்றன. இந்த பூங்கா கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது.

டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை இந்த தேசிய பூங்காவை சென்று பார்க்கலாம். ஜூனிலிருந்து அக்டோபர் வரை இங்கு மழைப் பொழியும்.

ஹவ்லாக் தீவிலிருன்ஹு அல்லது போர்ட் பிலேரிலிருந்து இவ்விடத்திற்கு படகுகள் பயன்படுத்தி செல்லலாம்

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசிய பூங்கா- எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்
Port Blair: ஒரு காலத்தில் கொடூர சிறையாக இருந்த இடம் - பிரபல சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com