இன்டிகோ விமான நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம்

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த குடும்பத்தை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்திய இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம்.
Indigo airlines
Indigo airlinesTwitter
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தடுத்து நிறுத்தனர்.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாற, பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள இண்டிகோ விமானச்சேவை, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் பயணிக்க விடாமல் தடுத்ததாகத் தெரிவித்தது.

Indigo
IndigoTwitter

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இப்படிப்பட்ட நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், விசாரணைக்குப் பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

Special child
Special childTwitter

இந்த நிலையில், மாற்றுத் திறனாளி குழந்தை பயணம் செய்ய மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்ள, ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Indigo airlines
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com